அவன் சாவகச்சேரியான் தான் சரி…!😆😆 இவர்கள் சொல்வது என்ன?
கீழே உள்ள எமது செய்தி இணைப்புக்கு பதிலடியாக சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…
யாழ் பெரியாஸ்பத்திரியில டொக்டர் எப்புடி பந்தா காட்டுறார் பாத்தீங்களோ!! வீடியோ
100 க்கு 99% ஆன நோயாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மனநிலை இதுதான்.
பொதுவாக விடுதிகளில் மருத்துவ நிபுணர்களோ ( VP ) அல்லது சத்திர சிகிச்சை நிபுணர்களோ (VS) நோயாளியை துண்டு வெட்டுவதில் பிரதான பங்கினை வகிப்பார்.
அவர் விடுதியில் நோயாளிகளை பார்வையிடும் போது ஐயா நீங்கள் போகலாம் என்று சொல்லி விட்டு சென்று விடுவார். சிலவேளைகளில் இங்க எல்லாம் எழுதி தருவினம் அப்புறம் போகலாம் எனவும் கூறுவது உண்டு.
அடுத்த நிமிடம் ward round முடிந்து பெரிய ஐயா வெளியேறியதும் இங்கால திருவிழா ஆரம்பிக்கும்.
சிலர் பெட்டி படுக்கைகளை சுற்றி கொண்டுவந்து பெரிய ஐயா போக சொல்லிட்டார் நான் போகவோ.🤔🤔.. சிலர் நான் கொஞ்சம் தூரம் வேளைக்கு விடுவியளோ எண்டு😁😁… அது அவர்கள் அறியாமை…
உண்மையில் என்ன நடக்கின்றது??
ward round முடிந்த பின்னர் அங்கே இருந்த நோயாளிகள் சிலரிற்கு அடுத்த கட்ட முக்கிய சிகிச்சை பற்றியும் வைத்திய நிபுணர் தெரிவித்திருப்பார். உதாரணமாக சில நோயாளிகளிற்கு எக்கோ சோதனை, சிலரிற்கு ஸ்கேன் சோதனை, xray சோதனை, இன்னும் சிலரிற்கு வேறு மருத்துவ நிபுணர்களின் சிபாரிசு, இன்னொரு விடுதிக்கு நோயாளியை மாற்றுதல், புதிய மருந்துகளை பரிந்துரைத்தல், சத்திர சிகிச்சைக்கு தயார் படுத்தல், சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்புதல், இவ்வாறான மேலும் பல வேலைகளை குறித்த நேரத்திற்குள் அங்கு விடுதி வைத்தியராக இருக்கும் வைத்தியரே செய்ய வேண்டும்.
அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிக்க படும் பாடு இருக்கே… கல்லை கண்டால் நாயை காணோம்.. நாயை கண்டால் கல்லை காணோம் எண்டது போல.. ஒரு சுகாதார உதவியாளரை வைத்துக்கொண்டு அனைத்தையும் செய்விக்க வேண்டும்..
இதற்குள் விடுதிக்கு வரும் புதிய நோயாளிகளை பார்வையிட வேண்டும், வேறு வைத்திய நிபுணர்கள் நோயாளியை பார்வையிட வரும்போது செல்ல வேண்டும்… இன்னும் பல இங்கே எழுதாத விடயங்கள் இருக்கின்றது… இவற்றை எல்லாம் ஓரளவு முடித்துக்கொண்டு அப்பாடா எண்டு டிஸ்சார்ஜ் எழுதுவம் எண்டா….
அதுவும் சும்மா இல்லை. நோயாளி விடுதிக்கு வந்த நாள் முதல் இன்றுவரை நடந்தது, பரிசோதனை முடிவுகள், ஏனைய வைத்திய நிபுணர்களின் சிபாரிசுகள், அடுத்து என்ன செய்ய வேண்டும், கிளினிக் சம்மந்தமான விடயங்கள்… அப்பிடி இப்பிடி எண்டு எழுதி ஒருமாதிரி எழுதி முடிக்க,
அடுத்தது தாதியோட பங்கு.. அதுவும் சில நேரங்களில் சிக்கல் தான்… மருந்து கொடுக்கும் நேரம்… மருந்து கட்டும் நேரம்… ஊசி போடும் நேரம்… இவற்றினை தவிர்க்க முடியாது… அதையும் சமாளித்து கிடைக்கிற கைப்பில் ஐயா வாங்க வீட்ட போகலாம் எண்டு துரத்தி விட முடியாது..
விடுதியை விட்டு போன பின்னரான கவனிப்பு, கிளினிக் வருகை, மருந்து பாவனை, உணவு பழக்கவழக்கம், தையல் வெட்டுதல், மருந்து கட்டுதல்… இப்பிடியே சொல்லி முடிக்க தொண்டை தண்ணி வற்றி போகும்…
பின்னர் கையில் ஊசி இருந்தால் அதை கழற்றி விட்டு 5நிமிஷம் இறுக்கி அமத்துங்கோ எண்டா போகிற அவசரத்தில அமத்தாம இரத்தம் ஒழுக ஒழுக ஓடி வருவினம்.. இப்பிடித்தான் போகும் பல விடுதி நடைமுறைகள்….
இருக்கிற ஆழணியை வைத்துக்கொண்டு நாங்கள் படும் பாடு.. இதில சாப்பிட்டது பாதி.. சாப்பிடாதது பாதி என நாங்கள் படும் அவஸ்தை எல்லாம் உங்களிற்கு புரியாது.. ஏனெனில் இது சுய நல பூமி…
நீங்க என்ன சொல்றது.. நாங்களே சொல்றோம்… அவன் சாவகச்சேரியான் தான் சரி உங்களுக்கு…!😆😆
பிற்குறிப்பு;-
இதனை நான் எனது சேவை நேரத்தில் எழுதவில்லை… இன்று நான் எனது சொந்த லீவில் வீட்டில் நிற்கின்றேன்.. யாரோ ஒருவர் பதிவிட்ட பதிவினை பார்த்து தூக்கம் இன்றி எழுதி இருக்கின்றேன்.. அவ்வளவுதான்.. நேரம் அதிகாலை 3 மணி… இதுவும் கடந்து போகும் 😆😆😆

