Uncategorized

யாழ் பல்கலைக்கழகத்தில் உருவான வித்தியாசமான காதல்!! இருவரும் தம்பதிகளானது எப்படி? ( Photos)

சிங்களப் பகுதியில் இடம்பெற்ற ஒரு சம்பவம் ஆனது இணையவாசிகள் இடையே பேசு பொருளாக மாறியிருக்கிறது. இதயத்தைக் கொள்ளைகொண்ட காதல் கதை இது. அந்த இளைஞனும் யுவதியும் யாழ் பல்கலைக்கழகத்தில் சந்திக்கிறார்கள். சிங்கள இளைஞனும் தமிழ் யுவதியும் இருவரும் யாழ் பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்டது போலவே அவருடைய இதயங்களும் இணைந்துகொண்டது. அவனுக்கு தமிழ் தெரியாது. அவளுக்கும் சிங்களம் புரியாது . ஆனாலும் செம்புலப்பெயல் நீர் போல அவருடைய அன்புடைய நெஞ்சங்கள் கலந்திட்ட காதல் கதை இது.

May be an image of 2 people, people smiling, ocean and beach

அவளுக்காக அவன் தமிழ் கற்றுக்கொள்கிறான்.ஒரு நாள் நான் உன்னை காதலிக்கிறேன். கவலைப்படாதே நான் உன்னிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. மனதில் மறைத்து வைத்திருக்க முடியவில்லை கூறிவிட்டேன் என அழைக்க தமிழிலேயே தன் இதயத்தைத் திறந்து காட்டினான் அந்த சிங்கள இளைஞன். அவனும்அவளும் அதன் பின்னர் ஒருவாரம் பேசிக்கொள்ளவில்லை. மீண்டும் ஒரு வாரத்தின் பின்னர் அந்தத் தூய அன்பு தொடர்கிறது. ”அன்று உன்னிடம் அப்படி கேட்டதுக்கு கோவப்பட்டாயா” என்றான் அவன்.  இல்லையென்றால் அவள். நான்உன்னை காதலிக்கிறேன் என்று மீண்டும் சொன்னான் அந்த இளைஞன்.அவள் சிரித்தாள் ஆனாலும் பதில் இல்லை அவருடைய பாசப்பிணைப்பு தொடர்கின்றது.

May be an image of 2 people, people smiling, horizon, body of water and beach

அந்த உறவானது நட்பா காதலா என்று உணர்ந்துகொள்ள முடியாத ஒரு நிலையில் அந்த நட்பு ,அந்தக் காதல்,அந்த சிங்கள தமிழ் இளைஞர் யுவதிகளை கிடையிலான அந்தஉறவு தொடர்கிறது. ஒரு நாள் அவன் அவளுடன் பேசாமல் உறங்கச் சென்று விடுகிறான் . திடீரென ஏதோ ஒரு உந்துதல் அவன் அதிகாலையில் கண் விழித்து கொண்டான். அவனது தொலைபேசியை பார்க்கிறான். அங்கே அவளைத் தவிர விடப்பட்ட அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் காணப்படுகிறது. அவசர அவசரமாக அதை படித்து முடிக்கிறார். அதிலே நான் உன்னை கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஆனாலும் எப்படியும் என் உறவினர்களுக்கு உன்னை
பிடிக்காது. ஆனால் என் பெற்றோரை தாண்டி உன்னிடம் என்னால் வந்து விடவும் முடியாது.வீணாக உன் இதயத்தில் ஆசைகளை ஏற்படுத்திவிட எனக்கு பயமாகஇருக்கிறது என்றால் அவள். இந்த சம்பவங்கள் இடம் பெறுகிறது 2016ஆம் ஆண்டளவில், இவ்வாறு ஆரம்பித்த அவருடைய காதல் படிப்படியாக வளர்ச்சி அடைகிறது .அதன் பின் பல சவால்களுக்கு மத்தியில் அவர்களுடைய காதல் பயணிக்கிறது தொடர்ச்சியாக பல்வேறு சவால்கள், கட்டுக்கதைகள்,அவதூறுகள், வதந்திகள் என அவருடைய காதலை பாதிப்படையச் செய்கிறது.

May be an image of 2 people, people smiling and people studying

இந்த நிலையில் அவர்கள் சேர்ந்து விட முடியாதா என்ற ஏக்கத்தில் தவித்துக்கொண்டிருந்த நேரத்திலே அவர்களுக்கு வருகின்ற சவால்களை அவர்களுக்கு காதலுக்கு இடையூறாக இருக்கின்றது. இந்த நிலையிலே நாக விகாரையின் படிக்கட்டுகளில் அமர்ந்து இருவரும் கைகோர்த்தபடி அழுகின்றனர்.இவ்வாறு கண்ணீரும்,கவலையோடும் தொடர்கின்ற அவர்கள் காதலானது பின்னர் நாட்கள் செல்லசெல்ல சில ஆதரவுகள் பல எதிர்ப்புகள் சவால்கள் மத்தியிலே தொடர்கின்றது அத்தனையும் கடந்து நண்பர்கள்
உறவினர்கள் ஆதரவுடன் அந்தகாதல் கதை திருமணத்தில் முடிவடைகின்றது.  2023ஆம் ஆண்டு நான்காம் மாதம் 25ஆம் திகதி அவருடையஅந்த காதல் காவியம் ஆனது திருமணத்தில் முடிவடைந்திருக்கினறது.

May be an image of 2 people, people smiling and wedding

சாதி மதம் இனம் கடந்து அவனும் அவளும் உருவாக்கியஅந்த காதல் காவியம் ஆனது இன்று. தென்னிலங்கை மக்களிடையேயும் இணையவாசிகளின் இதயத்தைக் கொள்ளை கொண்ட ஒரு நிகழ்வாக பதிவுசெய்யப்படுகிறது. நாளுக்குநாள் காதல் தோல்விகளும் காதலுக்கான சாதி மதம் என்ற அடிப்படையிலான எதிர்ப்புகளும் பிரிவுகளும் இடைவெளி விட்டுச் செல்கின்ற காதலன் என்று சொல்லி காதல் தொடர்கின்ற போது சரியாகபேசமுடியாத ஆனால் ஒருவருடைய இதயத்தை கொள்ளைகொண்ட அந்த காதல் மொழி மதம் இனம் எல்லாவற்றையும் கடந்து பல சவால்களை தாண்டி வென்றிருக்கிறது. எமது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.