இந்தியச் செய்திகள்கிசு கிசு

ரூ.22 லட்சத்துடன் கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவியை கல்லால் அடித்துக் கொன்ற கணவன்! உல்லாசத்தில் இருக்கும் போது மாட்டிக்கொண்ட சோகம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடும்ப நிலத்தை விற்ற தொகையோடு கள்ளக்காதலனுடன் சென்ற மனைவியைக் கணவனே கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி (39). இவரது மனைவி வித்யா (30). சமீபத்தில் தங்களுக்குச் சொந்தமான நிலத்தை ரூ.22 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனர். இந்நிலையில், அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு வித்யா தனது கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு வங்கிக்கு வித்யா வந்திருப்பதை அறிந்த நாராயணசாமி அங்குச் சென்றுள்ளார். நிலத்தை விற்ற பணம் மற்றும் மீதமுள்ள சொத்துகளைக் குழந்தைகளின் பெயரில் எழுதி வைக்குமாறு வித்யாவிடம் வலியுறுத்தியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுத் தகராறாக மாறியுள்ளது. ஆத்திரமடைந்த நாராயணசாமி, அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து வித்யாவின் மண்டையில் பலமாகத் தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த வித்யா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த தேன்கனிக்கோட்டை காவல்துறையினர் வித்யாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், நாராயணசாமியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x