புதினங்களின் சங்கமம்

நீதியுடன் தொடர்புடைய நிறுவனத்தில் நாளை நடக்கப் போகும் கேளிக்கை நிகழ்வு!!

யாழில் நீதியுடன் தொடர்புடைய நிறுவனத்தில் நாளை பெரும் கேளிக்கை நிகழ்வு ஒன்று நடக்கவிருப்பதாகத் தெரியவருகின்றது. குறித்த நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றும் இடமாற்றம் பெற்றும் சென்றவர்களைக் கௌரவிப்பது என்ற போர்வையிலேயே இந்த கேளிக்கை நிகழ்வு நடைபெறவுள்ளது. ஒரே மாதிரியான ஆடைகளுடன் குறித்த நிறுவனப் பணியாளர்கள் வரவேண்டும் எனவும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். இந்த கேளிக்கை நிகழ்வுக்காக பெருமளவு பணமும் செலவிடப்படவுள்ளது. இந்தச் செலவும் ஊழியர்களின் தலையில் கட்டப்பட்டு ஒவ்வொரு ஊழியருக்கும் பத்தாயிரம் ரூபா அளவில் செலவுக் கணக்கு வந்துள்ளதாக ஊழியர்கள் சிலர் கவலையுடன் விசனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக குறித்த நிறுவனத்தின் தலைமைப்பீடம் பொறுப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.