சிங்களத்திக்கு குஞ்சுமணி காட்டும் ஆட்டோக்காரன்!! அதிர்ச்சிக் காட்சிகள்!!
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஓட்டுநர்களால் பெண்கள் பாலியல் வனகொடுமைக்கு உட்படுத்தப்பட்ட இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதேவேளை கொழும்பில் தமிழர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் ஒன்றான பம்பலப்பிட்டியில் சொந்த வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த பெண்ணொருவரிடம், எதிரே வந்து முறையற்ற விதத்தில் நடந்து கொண்ட முச்சக்கரவண்டி சாரதி ஆறு நாட்களின் பின்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் கடந்த 14 ஆம் திகதி காலை தொழில் நிமித்தம் தனது சொந்த வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த பெண்ணை தொடர்ந்து வந்த இளம் வயது முச்சக்கரவண்டி ஓட்டுநர் ஒருவர் வாகனத்தை அங்குமிங்குமாக பின்தொடர்ந்து முறையற்ற சைகைளை காட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
எனினும் குறித்த பெண் தைரியமாக முச்சக்கரவண்டி ஓட்டுநரின் செயற்பாடுகளை தனது தொலைபேசியில் காணொளியாக பதிவுசெய்து, அதனை சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து பட்டப்பகலில் கொழும்பு பிரதான வீதியில் முச்சக்கர வண்டி சாரதியொருவர் அநாகரிகமாக நடந்துகொண்டதற்கு பலர் தமது கடும் எதிர்ப்பினை பதிவுசெய்ததுடன், பாதிக்கப்பட்ட பெண்ணை உடனடியாக பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறைப்பாடு செய்யுமாறும் கோரிக்கை விடுத்தனர்.
சமூக வலைத்தளத்திலிருந்த முகம்தெரியாத ஏராளமானோர் விடுத்த கோரிக்கைக்கு அமைய, சம்பந்தப்பட்ட பெண், பம்மபலப்பிட்டிய பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறைப்பாடொன்றினையும் பதிவுசெய்திருந்தார்.
இதற்கமையவே முச்சக்கர வண்டி சாரதியை பொலிசார் கைதுசெய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டிய பொலிஸாரிடம் தொடர்பு கொண்டு வினவிய போது, நாட்டில் “தொற்றுநோய்” போன்று இவ்வாறான செயற்பாடுகள் பரவியுள்ளதாக குறிப்பிட்ட பொலிசார், எனினும் துரதிஷ்டவசமாக பொலிஸ் படையில் இப்படியான குற்றங்களை தடுக்க போதிய மனிதவளம் இல்லை என்று தெரிவித்தனர்.
மூன்று ஆங்கில எழுத்துக்கள் கொண்ட முச்சக்கரவண்டிகளின் எண்ணிக்கை பத்து இலட்சத்துக்கும் அதிகமாக இருப்பதாகவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை பம்பலப்பிட்டிய பிரதேசத்தில் கடந்த 14 ஆம் திகதி பாதிப்புக்குள்ளான பெண் மாத்திரமன்றி, கடந்த 13 ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தில் வைத்து மற்றுமொரு பெண் ஒருவரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.
இவர்கள் சந்தித்த பாலியல் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் தமது முகநூல் பக்கங்களில் பதிவிட்டிருந்தமையாலேயே குற்றவாளிகளில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.