சாவகச்சேரி பிரதேசசெயலாளரே!! எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!! குரங்கு கணக்கெடுப்பில் இளங்குமரன் பங்கேற்றாரா?
சாவகச்சேரி பிரதேசசெயலாளர் பிரிவில் 42 ஆயிரம் குரங்குகள் இருப்பது என்பது நம்பமுடியாத ஒன்று. ஏனெனில் சாவகச்சேரி தேர்தல் தொகுதியில் 18 வயதுக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களே கிட்டத்தட்ட 55 ஆயிரம் பேர்தான் உள்ளார்கள். இவர்களது தொகைக்கு சற்று குறைந்த தொகையளவான குரங்குகள் சாவகச்சேரியில் இருந்தால் நிலமை என்னவாகின்றது. ஆகவே கணக்கெடுப்பில் எங்கோ ஒரு தப்பு நடந்துள்ளது. இந்த கணக்கெடுப்பில் சாவகச்சேரி எம்.பி இளங்குமரன் பங்கேற்றாரா என்ற சந்தேகமும் நிலவுகின்றது. ஏனெனில் அவர் இலங்கை சனத்தொகை தொடர்பாக வித்தியாசமான புள்ளிவிபரத்த ஊடகங்கள் முன் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.


