FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்

யாழில் மாணவிகளை ஆசிரியர் கள்ளமாக போட்டோ எடுத்தார்!! முட்டாள் அதிபர் பலருக்கு மத்தியில் மாணவிகளை வீடியோ எடுக்கவிட்டார்!! (வீடியோ)

முட்டாள் ஒருவன் தெருவால் நடந்து போகும் போது சாணியை காலால் மிதித்துவிட்டான். தான் மிதித்தது என்ன என்று அறிவதற்காக அதனை கையால் வழித்து எடுத்து மூக்கில் வைத்து மணந்து பார்த்தானாம். அதே மாதிரியான செயற்பாடு ஒன்று தெல்லிப்பழை யூனியன் கல்லுாரி அதிபரின் வழிநடத்தலில் மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டது.

பேஸ்புக் மற்றும் சமூகவலைத்தளங்கள், இணையத்தளங்களில் தெல்லிப்பழை யூனியன் கல்லுாரி மாணவிகள் வகுப்பறைக்கு வெளியே துரத்தப்பட்டு நிற்கும் காட்சிகளுடன் செய்திகள், பதிவுகள் வெளியாகியிருந்தது. அந்தப் பதிவு இங்கு வீடியோவுடன் தரப்பட்டுள்ளது. https://vampan.net/47448/

குறித்த வீடியோ வெளிவந்த பின்னர் தெல்லிப்பழை யூனியன் கல்லுாரி அதிபர் உயர்தர மற்றும் சாதாரணதர மாணவர்களை உசுப்பேற்றி இன்று பாடசாலைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வைத்துள்ளார். அது தொடர்பான செய்தி கீழே தரப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் மாணவிகளை இரகசியமாக படம் பிடித்த ஆசிரியருக்கு எதிராக போராட்டம்!

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி முன்பாக இன்று மதியம் பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலை முடிவடைந்ததும் பாடசாலை பிரதான நுழைவாயில் முன்பாக ஒன்றுகூடிய உயர்தர மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியரொருவர் பாடசாலைக்கும் பாடசாலை அதிபருக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக தெரிவித்தே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த திங்கட்கிழமை உயர்தர மாணவர்களின் மதிப்பீட்டு அறிக்கை தொடர்பாக பெற்றோருக்கான கலந்துரையாடல் இடம்பெற்றபோது கலந்துரையாடலுக்கு வராத பெற்றோர்களின் மாணவர்களை வகுப்புக்கு வெளியே நிறுத்தி வைத்தார்.

இதன்போது பாடசாலையில் ஆசிரியர் ஒவர் மாணவிகளிடம் சாதாரனமாக உரையாடுவது போன்று உரையாடி அதனை ரகசியமாக தனது தொலைபேசியில் காணொளி எடுத்து மூக வலைத்தளங்களில் பதிவேற்றி பாடசாலைக்கும், மாணவிகளுக்கும் களங்கத்தை ஏற்படுத்திய ஆசிரியரை இடமாற்றுமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தெல்லிப்பழை கோட்டக் கல்வி பணிப்பாளர் வேலாயுதர் அரசகேசரி மாணவர்களுடன் கலந்துரையாடியதுடன் அவரிடம் மாணவர்களினால் கோரிக்கை கடிதமும் வழங்கப்பட்டது.

இதனை வலயக் கல்விப் பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு வருவதாக வாக்குறுதி வழங்கியதை அடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு செய்திகள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது.

குறித்த இணையத்தளங்களில் வெளியாகிய புகைப்படங்களில் மாணவிகளின் உருவங்கள் முகமறைப்பின்றி வெளிளியாகியிருந்தது. அத்துடன் வி.தர்ஷலா, ந..புஸ்னகா, சு.பிரகீர்த்தியா ஆகிய மாணவிகளின் கையொப்பத்துடன் வலையக்கல்விப்பணிப்பாளருக்கு கடிதம் ஒன்றும் வரையப்பட்டுள்ளது. குறித்த 3 மாணவிகளும் அதிபரால் பெற்றோர் வரவில்லை என்ற காரணத்தால் வெளியேற்றப்பட்டவர்களா என அறிய முடியவில்லை. ஆனால் அதிபர் வைத்த கலந்துரையாடலுக்கு பெற்றோர் வரவில்லை என்ற காரணத்திற்காக மாணவர்களை வகுப்பை விட்டு வெளியே நிறுத்துவது முறையா?

பாடசாலைக்கு தலைமைதாங்கும் ஒருவர் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களை வரவழைக்கவே இயலாத ஒருவராக இருப்பவர் எவ்வாறு பாடசாலையைக் கொண்டு நடாத்துவார்? பாடசாலைக்கு வெளியே நிறுத்தப்பட்ட மாணவர்கள் மந்தபுத்தி உள்ளவர்களா? அவர்களது தேர்ச்சி மட்டம் குறைவாக இருந்துள்ளதா? அதனால் அவர்கள் பெற்றோருக்கு குறித்த கலந்துரையாடல் நடக்கும் தகவலைச் சொல்லவில்லையா? தற்போது நவீன தொழில்நுட்பங்கள் உள்ள சந்தர்ப்பத்தில் பெற்றோருக்கும் பாடசாலை நிர்வாகத்திற்கும் இடையில் வட்சப், வைபர் குறுாப் அல்லது வேறு தொடர்பாடல் மூலம் கலந்துரையாடல் தொடர்பாக அறிவிக்கப்பட்டதா? அந்த அறிவிப்பில் பெற்றோர் கட்டாயம் வரவேண்டும். இல்லையெனின் மாணவர்களை வெளியே நிற்க வைப்போம் என தெரிவிக்கப்பட்டதா?

ஏற்கனவே மாணவிகள் தொடர்பாக வெளியாகிய வீடியோவில் ஒரு சில மாணவிகளின் முகங்களே தெளிவாக தெரியுமளவுக்கு வீடியோ வெளிவந்தது. ஆனால் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மாணவிகளின் முகங்களும் தெளிவாகத் தெரியுமளவுக்கு வீடியோக்கள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அத்துடன் வி.தர்ஷலா, ந..புஸ்னகா, சு.பிரகீர்த்தியா ஆகிய மாணவிகளின் கடிதமும் வெளியாகியுள்ளது. அதிபரின் இவ்வாறான மிக முட்டாள்தனமான செயற்பாட்டுக்கு பெற்றோர்களின் பதில் என்ன?

May be an image of 9 people and textMay be an image of 6 people and textMay be an image of 3 people and textMay be an image of 9 people and textMay be an image of text