புதினங்களின் சங்கமம்

வடக்கு, மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு வெள்ளிக்கிழமை விசேட விடுமுறை!

வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வடக்கு, மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் வெள்ளிக்கிழமை (05) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.

மாகாணங்களின் ஆளுநர்களினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த, ஒக்டோபர் 25 ஆம் திகதி முதல் அனைத்து பாடசாலைகளிலும், ஆரம்பப்பிரிவுகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீள திறக்கப்பட்டன என்பது குறிப்பிடதக்கது.