புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக யாழ் இளைஞனிடம் 25 இலட்சம் மோசடி செய்த இத்தாலி பிரபாகரன்!!

யாழ் இளைஞர் ஒருவரை வெளிநாடு ஒன்றுக்கு அனுப்புவதாக யாழ் வலிகாமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சுமார் 25 இலட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது வெளிநாட்டுக்கு அனுப்புவதாக இத்தாலியில் வசிக்கும் யாழ் உடுவில் பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் பிரபாகரன் என்ற  தரகர் மூலம் குறித்த இளைஞனை அணுகியுள்ளனர்.

இளைஞனுடன் சகல விவரங்களையும் பெற்றுக்கொண்ட பிரபாகரன் போலி விசாவினை இத்தாலியில் வசிக்கும் நபர் மூலம் பெற்றுக்கொண்டு இளைஞனுக்கு வழங்கியுள்ளனர்.

குறித்தா வீசாவினை தூதரகத்திடம் காண்பித்த போது குறித்த வேலை வாய்ப்புக்கான வீசா போலியானது என உறுதிப்படுத்தப்பட்டது.

குறித்த விடையம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட இளைஞன் இத்தாலியில் வாசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரே பிரதான சூத்திரதாரி.

இவர் முல்லைத்தீவு தீவு பெண் ஒருவரை முதலில் திருமணம் செய்து இரு பிள்ளைகள் இருப்பதாகவும் பின்னர் அவர்களை கைவிட்டு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரை மறுமணம் செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

குறித்த நபர் என்னைப் போன்ற பலரிடம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல கோடி ரூபாய்களை பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.