புதினங்களின் சங்கமம்

யாழில் வீடு புகுந்த திருடனை மடக்கிப் பிடித்த சிங்கப் பெண்!! (வீடியோ)

வீட்டை உடைத்து திருட முற்பட்ட திருடன் பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டான்.

இந்தச் சம்பவம் யாழ்.சாவகச்சேரி வடக்கு , மந்துவில் பகுதியில் இன்று காலையில் இடம் பெற்றுள்ளது.

வீட்டவர்கள் இன்று காலையில் வெளியிடத்துக்கு சென்றிருந்த நிலையில், பெண் ஒருவர் மட்டும் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

திருடன் கதவை உடைக்கும் சத்தம் கேட்டதும் சுதாகரித்துக்கொண்டு, அயலவர்களின் உதவியோடு திருடனைப் பிடித்துள்ளார்.

அதன்பின்னர் திருடனை நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

May be an image of 6 people, people standing and outdoorsNo photo description available.