புதினங்களின் சங்கமம்

யாழ் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அதிபரின் திருவிளையாடல்!! (வீடியோ)

கடும் வெப்பமான காலநிலையில் மாணவர்களை வெளியில் நிற்கவைத்து தண்டனை வழங்கிய அதிபர்!

எல்நினோ தாக்கத்தின் காரணமாக இலங்கை முழுவதும் வெப்பமான வானிலை நிலவுகிறது. நாட்டின் பல பகுதிகளுக்கும் தற்போது பகலில் வெப்பநிலை உயர்வாக காணப்படுகின்றது. பல மேற்பரப்பு நீர் நிலைகளின் ஆவியாக்க அளவு மாத சராசரியை விட 26% உயர்வாக காணப்படுகின்றது. இதனால் பல குளங்களில் நீர் மட்டம் சடுதியாக குறைவடைந்து வருகின்றது. பல பிரதேசங்களில் நீர்ப்பற்றாக்குறை நிலவும் சூழ்நிலை காணப்படுகின்றது.

இந்நிலையில் –
நேற்று முன்தினம் (7) யாழ்.தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அதிபரால் உயர்தர மாணவர்களை பாடசாலை நேரம் முழுவதும் கட்டிடத்திற்கு வெளியில் தவிக்கவிட்டு தண்டனை வழங்கிய விடயம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கூட்டத்திற்கு பெற்றோர்கள் சமூகமளிக்காத மாணவர்களே இவ்வாறு நிற்கவைத்ததாக அறியமுடிகின்றது.
இது தொடர்பில் சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.