புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்தில் கொரோனா பரப்பும் முக்கிய இடமாக றியோ கிறீம்கவுஸ்!! அதிகாரிகள் மௌனம்!!

யாழில் கொரோனா வைரஸ் பரப்பும் முக்கிய இடமாக றியோ கிறீம்கவுஸ் இருப்பதாகவும் ஆனால் அதை அரச அதிகாரிகள் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளது. குறித்த கிறிம்கவுஸ்சிற்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகள் பெருமளவும் வந்து போயுள்ளனர். வந்துகொண்டிருக்கின்றனர். அத்துடன் வெளிநாட்டு தமிழர்களும் வந்து செல்கின்றனர். தென்பகுதியில் இருந்து வருபவர்களும் குறித்த கிறிம்கவுசிற்கு சென்று வருகின்றனர். இதனால் அங்கு பெரும் வைரஸ் தொற்று அபாயம் இருந்தும் மாநகரசபை முதல்வரோ அல்லது நல்லுார் பிரதேசசெயலகமோ எந்தவித அக்கறையும் செலுத்தாது மௌனமாக இருப்பதாக சமூகநலன்விரும்பிகள் கவலை தெரிவித்துள்ளனர். குறித்த கிறீம்கவுஸ் அதிகாரிகளை பணத்தின் மூலம் சமாளித்துள்ளது எனவும் லஞ்சம் கொடுத்ததாலேயே அதிகாரிகள் தொடங்கி முதல்வர்வரை மௌனமாக இருப்பதாகவும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளது. கடந்த ஒரிரு நாட்களுக்கு முன் றியோ ஐஸ்கிறீம்கடையில் கொரோனா தொற்று சந்தேகநபர்களை அடையாளப்படுத்த முயன்ற வைத்தியர் குறித்த கடை ஊழியர்களால் தாக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.