யாழில் மட்டுமல்ல!! கனடாவிலும் கொள்ளையர்களாக ஈழத்தமிழர் இருவரை வலை வீசித் தேடுகின்றது கனேடியப் பொலிஸ்!!

கனடாவில் கொள்ளை மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இரண்டு தமிழர்களைத்
தேடுவதாக டொராண்டோ பொலிஸார் அறிவித்துள்ளனர். கடந்த ஜனவரி 30ம் திகதி மார்க்கம் வீதி
பகுதியில், மக்நிகோல் அவென்யூவில் வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து பலவந்தமாக ஒருவரைக்
கடத்திச் சென்று, தாக்கி, பணம் மற்றும் நகைகளை பறித்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் குறித்த
இருவரும் தேடப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

/இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் டொராண்டோ பொலிஸார், தேடப்படும் இருவர்
குறித்து தகவல் வெளியிட்டுள்ளனர். சந்தேக நபர்களான 42 வயதுடைய மார்க்கம் பகுதியை
சேர்ந்த ராம்நாராஜ் ராஜரட்ணம், டொராண்டோவை சேர்ந்த கோகுலநாதன் ஐயாத்துரை ஆகியோர்
தொடர்பிலான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

/மேலும் கடத்திச் செல்லப்பட்ட நபரை சந்தேகநபர்கள் கை மற்றும் கால்களை கட்டி உடல் ரீதியாக
தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)