இந்தியச் செய்திகள்கிசு கிசு

“எங்க அம்மாவ விடுங்க அங்கிள்”- தாயின் மானத்தை காக்கப் போராடிய 10 வயது சிறுவன்

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது கணவரைப் பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் தனியாக அப்பகுதியில் வசித்து வந்தார்.
இவர் ஒரு தனியார் ஷோரூமில் பணியாற்றி வந்தபோது, அங்கு தன்னுடன் வேலை செய்த சக்திவேல் என்பவருடன் நட்பு ரீதியாக இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 2 மணியளவில், அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார் சக்திவேல். தூங்கிக் கொண்டிருந்த அவரைப் பா**லியல் வ*ன்கொ*டுமை செய்ய முயன்றுள்ளார்.
அப்போது தூங்கி கொண்டிருந்த அந்தப் பெண்ணின் 10 வயது மகன், தனது தாயின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து சக்திவேலை தடுத்துள்ளான்.
இதனால் கோபமடைந்த சக்திவேல் ஒரு சிறுவன் தன்னைத் தடுப்பதா என தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அந்த சிறுவனை சக்திவேல் சரமாரியாக வெ*ட்டியுள்ளார். இதில் அந்த சிறுவன் ரத்த வெள்ளத்தில் து*டிதுடித்து அந்த இடத்திலேயே உ*ரிழந்தான்.
தனது கண் முன்னால் தனது மகனுக்கு நேர்ந்த நிலையை பார்த்ததும் அந்தப் பெண் தடுத்துள்ளார். அவருக்கும் வெட்டு விழுந்ததில் அந்த பெண்ணின் வலது கை து*ண்டிக்கப்பட்டது.
மேலும் தலை மற்றும் உடல் பகுதிகளில் பலத்த வெ*ட்டுக்கா*யங்களுடன் அவர் மயங்கி விழுந்தார்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதைக் கண்ட சக்திவேல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அந்தப் பெண், தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சக்திவேலை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், கருப்பூர் கோரிமேடு பகுதியில் அவர் ஒரு மரத்தில் தனது பெல்ட்டால் தூக்கிட்டு த*ற்கொ**லை செய்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் எப்பவும் தனது குடும்பத்தினருடன் தான் இருக்க வேண்டும். கணவனிடம் கோபித்து கொண்டு தனியாக வாழ்வது தவறு. தனது அம்மா வீட்டிலோ அல்லது அம்மா வீட்டிற்கு அருகிலோ வீடு எடுத்து வாழ வேண்டும். ஒரு வேளை அம்மா அப்பா இல்லாவிடில் தனியாக வாழும் சூழல் வந்தால் ஒரு ஆணிடமும் தேவையின்றி பேசவோ பழகவோ கூடாது.
இது சரிதானா?
இது பற்றிய உங்க கருத்து என்ன?