புதினங்களின் சங்கமம்

விடுமுறை வழங்கப்படவில்லையா? உடனடியாக அறிவியுங்கள்!

தனியார் துறையினருக்கு விடுமுறை வழங்குமாறு அரசாங்கத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில், தனியார் நிறுவனங்கள் இயங்குமாயின் அது தொடர்பில் தொழில் உறவுகள் திணைக்களத்திற்கு அறிவிக்க முடியும் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் தனியார் தொழிற்தளங்கள் இயங்குவதற்கான காரணத்தை தொழில் உறவுகள் திணைக்களத்திற்கு தெளிவுப்படுத்த வேண்டும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கத்தினால் இன்று (17) முதல் நாளை மறுதினம் (20) வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரம், உணவு விநியோகம், போக்குவரத்து, அத்தியாவசிய சேவை, வங்கி, மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலாளர் காரியாலங்கள் என்பவற்றில் சேவையாற்றும் அரச சேவையாளர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து தினங்களுக்கும் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.