கிசு கிசு

15 வயது மாணவருக்கு போதைப்பொருள் கொடுத்து தொடர்ந்து பாலியல் உறவில் ஈடுபட்ட 36 வயது ஆசிரியைக்கு சிறைத் தண்டனை!

Pennsylvania மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியைக்கு நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, 36 வயதான Michelle Mercogliano என்பவருக்கு 15 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டதாக Chester County District Attorney’s Office தெரிவித்துள்ளது. மேலும், ஆறரை ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் பரோல் கண்காணிப்பில் இருக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெர்கோக்லியானோ, உயர்நிலைப் பள்ளி மாணவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டதையும், அவருக்கு கஞ்சா வழங்கியதையும் ஒப்புக்கொண்டதாக மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் உறுதி செய்துள்ளது.

இந்த சம்பவம் கடந்த ஆண்டில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. பல முறை பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சுமார் 15 முறை மருத்துவ பயன்பாட்டுக்கான மரிஜுவானா வாங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் இருவரும் சேர்ந்து அதைப் பயன்படுத்தி பாலியல் உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Wayne பகுதியில் உள்ள ஆசிரியையின் பெற்றோர் வீட்டில்தான் இந்த சம்பவங்கள் நடந்ததாக கூறப்படுகிறது. மாணவர் தனது சகோதரியிடம் இதுகுறித்து தெரிவித்ததன் மூலம் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. பின்னர் குழந்தையின் பெற்றோர் புகார் அளித்ததைத் தொடர்ந்து ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

அவரது ஆசிரியர் உரிமம் ரத்து செய்யப்பட்டதுடன், பரோல் காலத்தில் குழந்தைகளுடன் தொடர்பு கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.