புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சி பாடசாலைக்கு அருகாமையில் அதிகளவான தோட்டாக்கள் மீட்பு.!

கிளிநொச்சி புது முறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு அருகாமையில் இன்றைய தினம் காலை 9 மணியளவில் கிளிநொச்சி பொலிஸாரால் அதிகளவான தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி புது முறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு அருகாமையில் இன்றைய தினம் காலை சந்தேகத்திற்கிடமாக அதிகளவு தோட்டாக்கள் சிதறிக் காணப்பட்டதுடன் அதனை அவதானித்த பாடசாலை சமூகம் உடனடியாக கிளிநொச்சி பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு அறிவித்துள்ளனர்.அதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட இடத்திற்கு வருகை தந்த பொலிஸார், இராணுவம் சிதறிக் காணப்பட்ட தோட்டாக்களை மீட்கும் பணியினை பாதுகாப்பான முறையில் மேற்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து 11மணியளவில் 150ற்கு மேற்பட்ட தோட்டாக்கள் மீட்கப்பட்டதுடன் இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.