புதினங்களின் சங்கமம்

காற்றிலும் பரவும் கொரோனா!- கடும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்

கொரோனா வைரஸ் உலகெங்கும் வேகமாகப் பரவி வருகிறது. தமிழ்நாட்டிலும் இந்த பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மனிதர்களுக்கு இடையே தும்மல், இருமல் ஆகியவற்றின் போது வெளிவரும் நீர் துளிகளால் இந்த வைரஸ் காற்றில் பரவுகிறது. இந்த வகையான வைரஸ் எந்த எந்தப் பரப்பில் எவ்வளவு காலம் வீரியத்துடன் இருக்கும். எப்பொழுது செயலிழக்கும் என்பது வெப்பம், ஈரப்பதம் மற்றும் பரப்பின் தன்மை ஆகிய காரணிகளைப் பொறுத்து மாறுபடும் என்று உலக சுகாதார அமைப்பு தனது இணைய தளத்தில் தெரிவித்து உள்ளது.

இலங்கை முழுவதும் இன்று 2 மணிவரை ஊரடங்கு தற்காலிகமாக நீக்கப்படுகின்றது!!

இது குறித்தான ஆய்வுகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக உலக சுகாதார அமைப்பின் வளர்ந்து வரும் நோய்கள் மற்றும் ஜுனோசிஸ் பிரிவு தலைவர் டாக்டர் மரியா வான் கெர்கேவ் தெரிவித்துள்ளார். மேலும், “கொரோனா வைரஸ் காற்றில் குறிப்பிட்ட காலம் இருக்கும். இதனால் நோயாளிகளுக்கு சுகாதாரப் பணியாளர்கள் சிகிச்சை அளிக்கும்போது கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது முக்கியமானது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ ஊழியர்கள் N-95 மாஸ்குகளை அணிந்துகொள்ள சுகாதார அமைப்பின் அதிகாரிகள் பரிந்துரைக்கிறார்கள். ஏனெனில் அவ்வகை மாஸ்குகள் திரவ மற்றும் காற்று வழி துகள்களை 95 சதவிகிதம் வடிகட்டுகின்றன. மக்களும் தமிழக அரசு வழிகாட்டுதலின் படி ஒத்துழைப்புத் தந்து இந்த பெருந்தொற்றில் தமிழகம் மீண்டு வர உதவ வேண்டும்.