புதினங்களின் சங்கமம்

நாளை எந்த ஒரு நபரும் வாகனத்தில் செல்ல முடியாது!! நடந்து செல்லலாம்!!முக்கிய அறிவித்தல் வெளியாகியது!!

 

நாடு தழுவியதாக அமுலில் உள்ள சமூக முடக்கல் கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்படும் நாட்களில் வெளிச் செல்வது தொடர்பிலான நடைமுறைகள் குறித்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.

நடமாட்டக்கட்டுப்பாடு தற்காலிகமாக தளர்த்தப்படும் நாளை(25), எதிர்வரும் 31 மற்றும் ஜூன் 4ஆம் திகதிகளில் வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே அத்தியாவசிய பொருள் கொள்வனவுக்காக வெளியே செல்ல முடியும் என காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவ்வாறு, வெளியே செல்லும் எந்தவொரு நபருக்கும் வாகனங்களில் செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் வீட்டுக்கு அருகில் உள்ள (நடந்து செல்லும் தூரத்திலுள்ள) வர்த்தக நிலையங்களில் மாத்திரமே அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய அனுமதிக்கப்படுவர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.அத்துடன், அடையாள அட்டை இலக்க முறைமை நாளைய தினம் செல்லுபடியாகாது என்றும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.