விவாகரத்துப் பெற்று அரசாங்கத்தின் உதவித் தொகை பெற்று வந்த வவுனியாவைச் சேர்ந்த 36 வயதான குடும்ப பெண் ஜெயதர்சி லண்டன் பொலிசாரிடம் கையும் களவுமாக மாட்டியுள்ளார். ஜெயதர்சி தனது கணவனான ஒட்டுசுட்டான் பகுதியைச் சேர்ந்த 42 வயதான சாரங்களை கடந்த 2022ம் ஆண்டு விவாகரத்துக்கு விண்ணப்பித்து விவாகரத்துப் பெற்றுள்ளார். அதன் பின்னர் தனது 7, 5 வயது பிள்ளைகளுடன் அரசாங்கத்தின் மூலம் உதவி பெற்று வாழ்ந்து வந்ததாகத் தெரியவருகின்றது. இவ்வாறான நிலையில் லண்டன் பொலிசாருக்கு கிடைத்த இரகசியத் தகவல்களை அடுத்து ஜெயாவின் வீட்டுக்கு சென்ற பொலிசார் அங்கு ஜெயாவுடன் சாரங்கன் குடித்தனமாக வாழ்ந்து வருவதை கையும் களவுமாகப் பிடித்துள்ளதாகத் தெரியவருகின்றது. ஜெயாவுடன் விவாகரத்துப் பெற்ற சாரங்கனை ஜெயாவின் குடியிருப்புப் பகுதிக்கு ஒரு போதும் செல்லக்கூடாது என நீதிமன்றில் எச்சரித்தே விவாகரத்து கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜெயா மற்றும் கணவர் ஆகியோர் சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளதாகவும் இருவருக்கு வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
Home புதினங்களின் சங்கமம் சொந்தப் புருசனுடன் கள்ளக் காதல்! லண்டன் பொலிசாரிம் மாட்டிய வவுனியா ஜெயா அக்கா!!





