புலம்பெயர் ஆண்கள் 50-55 வயதில் ஊருக்கு போய் இரண்டாவது திருமணம் முடிக்க என்ன காரணம்..??
இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்…
நோர்வே வாழ் தமிழர்களிடம்( எல்லா நாடுகளிலும் தான்) இந்த 50 வயதுக்கு பின், அதாவது திருமணம் முடித்து 20-25 வருடங்கள் வாழ்ந்து 2-3 பிள்ளைகளையும் பெற்றுவிட்டு, அவர்களும் 15-18 வயதை அடைந்திருப்பார்கள்..
பெண்களும் பிள்ளைகள் சிறுவயதாக இருக்கும் வரை கணவனின் செய்கைகளை பொறுத்துக்கொள்வார்கள்..( அநேகமானவை புலத்தில் குடிக்கு அடிமையாகி நடக்கும் குடும்ப பிரசரசனைகள் தான்)
பிள்ளைகள் ஒரு வயதுக்கு மேல் வளர்ந்தத்தும் இதற்காக தான் நான் காத்துக்கொண்டிருந்தேன் என்று தங்கள் வேலையை காட்ட ஆரம்பித்துவிடுவார்கள் பெண்கள்..
(இந்த ஆண்கள் இங்கு வந்து முதல் 3-5 வருடங்கள் படாதா பாடெல்லாம் பட்டு, ஒரு நிலைக்கு வந்து, ஊரிலிருந்து திருமணம் முடித்து எந்த சிரமமும் இல்லாமல் எல்லாவற்றையும் ஒழுங்கு செய்து அவர்களை இங்கு வரவழைத்திருப்பார்கள், அவர்கள் இங்கு வந்து தனது குடும்பம் தனது தங்கைமார், தம்பிமார் எல்லாரையும் கணவனின் உழைப்பில் ஐரோப்பாக்கு அழைத்து விட்டிருப்பார்கள்)
அதன் பின் குடும்ப பிரச்சனைகள் முற்றி பெற்ற பிள்ளைகளே காவல்துறைக்கு அறிவித்து தகப்பன்மாரை, அவர்கள் இருக்கும் 5-10 Km பிரதேசத்துக்குள் போகக் கூடாது என கட்டளையிட்டு, பல தடவையாக விளக்கங்கள் நடந்து இறுதியில் அது விவாகரத்தில் முடியும்..
உன்னை விட்டால் எனக்கு வேறு ஆளா இல்லை என விவகாரத்து கிடைத்த அடுத்த நாளே ஐயா ஊரிலை நிப்பார், புது மாப்பிளையாக..
இங்கு மட்டும் இப்படி நிறைய பேரின் கதையுண்டு..
ஊரிலும் மாப்பிளை என்னவாகவும் இருக்கட்டும் ஆனால் வெளிநாட்டில் நிக்கிறாரா..
இந்த தகுதி ஒன்றே காணும் 50 வயதிலும் போய் 25 வயது பெண்ணை கூட்டி வர..
இப்படி புலம்பெயர் வாழ்வின் கதைகளை புராணமாகவே எழுதலாம்…
இதை நான் ஏன் இங்கு பதிகிறேன் என்றால், நேற்று நான் போட்ட எனது முதலாளிக்கு மூன்றாவது திருமணம் என்ற பதிவின் கீழ் கூர்ப்படையாத ஏகப்பட்டவர்களின் பின்னூட்டங்களை நீங்களும் வாசித்திருப்பீர்கள்..
இது தமிழனின் கலாச்சாரமா..
தமிழனுக்கென்று ஒரு குணமுண்டு..
அது கேடு கெட்ட கலாச்சாரம்.. இப்படி ஏகப்பட்ட comments..
தமிழ் சமூகத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று தெரியாமல் இந்த ஜந்துகள் எந்த உலகத்தில் வாழ்கிறார்கள்..?

