புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசிபலன்கள் (26.10.2024)

மேஷம்

புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

ரிஷபம்

எதிர்ப்புகள் அடங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

மிதுனம்

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். அரசால் ஆதாயம் உண்டு. சகோதரர்களால் பயனடைவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.

கடகம்

இதுவரை இருந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வரும். நட்பு வட்டம் விரியும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

சிம்மம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். உடனே உணர்ச்சிவசப்பட்டு கத்தாதீர்கள். கணவன் – மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். விழிப்புடன் செயல்படவேண்டிய நாள்.

கன்னி

உணர்ச்சி வேகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். நிதானம் தேவைப்படும் நாள்.

துலாம்

அதிரடியான சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். ஆடை ஆபரணம் சேரும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். இனிமையான நாள்.

விருச்சிகம்

தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். தைரியம் கூடும் நாள்.

தனுசு

கணவன் – மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். நீண்ட நாளாக தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களின் ஆதரவை பெறுவீர்கள். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. உற்சாகமான நாள்.

மகரம்

சந்திராஷ்டமம் இருப்பதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒருவரை ஒருவர் மாற்றி குறை கூறி கொண்டிருக்க வேண்டாம். உடல் நலம் பாதிக்கும்.கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் அளவாக பழகுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். பொறுமை தேவைப்படும் நாள்.

கும்பம்

உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். எதிர்பாராத நன்மை உண்டாகும் நாள்.

மீனம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x