கொரோனா சந்தேகம்!! இராணுவ கோப்ரலும் மற்றுமொரு நபரும் குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றம்!!
புத்தளம் – தப்போவ இராணுவ முகாமில் கடமையாற்றிய வந்த இராணுவ கோப்ரல் மற்றும் இந்தோனேசியாவுக்கு சென்று வந்த ஒருவருக்கு கொரோனா நோய் அறிகுறிகள் தென்பட்டத்தை அடுத்து பாதுகாப்பாக புத்தளம் வைத்தியசாலையில் இருந்து குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இராணுவ கோப்ரல் முகாமில் கடமையாற்றிக் கொண்டிருந்த போது சுகவீனம் ஏற்பட்டுள்ளதுடன், தப்போவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அத்துடன் இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து நாடுகளில் சுற்றுலா சென்று திரும்பிய புத்தளம் நகரை சேர்ந்த ஒருவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவர்கள் இருவருக்கும் கொரோனா அடையாளங்கள் தென்பட்டதை அடுத்து அவர்கள் பாதுகாப்பாக குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த இருவரின் உடல் நிலை தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களின் உடல் நிலைமை தொடர்பாக உறுதிப்படுத்த குருணாகல் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக புத்தளம் வைத்தியசாலையின் பணிப்பாளர் சுமித் அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

