புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பிக்கான வாக்கு வீழ்ச்சி ஆரம்பம்!!

யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் மற்றும் அங்கஜன் குழுவினரது அட்டகாச நாட்டாமை நடவடிக்கை மற்றும் தமிழ்த்தேசியக் கட்சிகளின் ஏமாற்று பித்தலாட்டங்களால் விரக்தியுற்றிருந்த பலர் ஜே.வி.பியின் ஊழலற்ற ஆட்சிக்கு ஆதரவாக அவர்களுக்கு வாக்கு போடுவதற்கு எண்ணியிருந்தனர். பலர் தமது சொந்தசமூக வலைத்தளங்களில் பகிரங்கமாகவே ஜே.வி.பிக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தனர். இவ்வாறான நேரத்தில் யாழ்ப்பாண நாட்டாமைகளில் ஒருவரான டக்ளஸ் ஜனாதிபதியை சந்தித்து புகைப்படங்கள் எடுத்துள்ளமை யாழ்ப்பாண மக்களிடையே பெரும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன. இதனால் யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பி கட்சிக்கு பெரும் வாக்கு வீழ்ச்சி ஏற்படும் என்பதை அவதானிக்க முடிகின்றது. ஏற்கனவே பிரபலம் இல்லாத பலரை யாழ்ப்பாண நாடாளுமன்ற வேட்பாளர்களாக களம் இறக்கியிருக்கும் ஜே.வி.பி கட்சி தற்போது டக்ளசைசும் அரவணைத்துள்ளமை யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பிக்கு கிடைக்கும் வாக்குகளில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தவுள்ளதாக சமூகவலைதளங்களில் கருத்துக்கள் வெளியாகியுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x