கொழும்பு சிவப்பு பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டவருக்கு கொரோனா – பாதுகாப்புச் செயலாளர்

கொழும்பு சிவப்பு பள்ளிவாசலில் நடந்த தொழுகையில் கலந்துக்கொண்ட நபருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என வெளியாகியுள்ள செய்திகளை பள்ளிவாசல் மறுத்துள்ளது.

கடந்த 13 ஆம் திகதி சிவப்பு பள்ளியில் நடைபெற்ற தொழுகையில் கொரோனா தொற்றி ஒருவர் கலந்துக்கொண்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சியில் நேற்று இடம்பெற்ற விவாதம் ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தையும் மகனும் இருப்பதாகவும் அவர்களில் மகன் சிவப்பு பள்ளிவாசலில் நடந்த தொழுகையில் கலந்துக்கொண்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனால் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்தம் சம்பந்தமாக கவனம் செலுத்தி, அன்றைய தினம் தொழுகையில் கலந்துக்கொண்டவர்கள் தம்மை சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்வதாகவும் கமல் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

error

Enjoy this blog? Please spread the word :)