FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

நெடுந்தீவில் 5 பேரைக் கொடூரமாக வெட்டிக் கொன்ற ரகு இவன்தான்!! (புகைப்படங்கள்)

கீழே காணப்படும் ரகு தொடர்பான தகவல்கள் தீவக இளைஞர்கள் சிலரின் பேஸ்புக் பதிவில் வெளிவந்த தகவல்கள் ஆகும். ஏற்கனவே இவன் கைதாகியவுடன் கனடா குடியுரிமை உள்ளவன் என்றே பொலிஸ் தரப்புக்களால் தகவல்கள் கசிந்தன… ஆனால் இவன் ஜேர்மன் குடியுரிமை உள்ளவன் உன பதிவுகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பொலிசாரே உண்மையை உறுதிப்படுத்தல் வேண்டும்.

இந்த ச. ரகுநாதன் எனும் நபர் இணையத்தளங்களில் குறிப்பிடப்படுவது போன்று கனடா நாட்டின் குடியுரிமை பெற்றவரல்ல . இவரது தகப்பனார் புங்குடுதீவு குறிகாட்டுவானை சேர்ந்தவர் , தாயார் குருநாகல் மாவட்டத்தினை சேர்ந்தவர் . 1990 க்கு முன்பே இவர் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்துசென்றுவிட்டார் . அங்கு வெள்ளையின பெண்மணியை ( அவர் ஓர் மருத்துவர் என்று கூறப்படுகின்றது ) திருமணம் செய்திருந்தபோதிலும் தகராறுகள் காரணமாக குடும்பத்தினை பிரிந்து வாழ்ந்திருக்கிறார் . கொலை வழக்கு ஒன்றில் இவன் சம்மந்தப்பட்டு பின்னர் 2018 ம் ஆண்டளவில் நாடுகடத்தப்பட்டிருந்தார் . இவரது தாயாரின் மரண இறுதிச்சடங்கு புங்குடுதீவில் நடைபெற்றிருந்தது . அப்போது எடுக்கப்பட்ட படங்கள்தான் இவை……

இவர் நேற்று காலையிலேயே புங்குடுதீவு வந்து ஒன்றுமே நடவாதது போன்று சாதாரணமாக இருந்திருக்கிறார் . பின்னர் இரவு 7 . 30 மணியளவில் புங்குடுதீவு பெருங்காட்டிலுள்ள ஒரு வீட்டில் இவர் தங்கிநிற்பதை உறுதிப்படுத்திக்கொண்ட   இளைஞர்கள் குழு ஒன்று அவ்வீட்டினை சுற்றிவளைத்ததோடு பொலிசாரை அங்குவரவழைத்துள்ளார்கள். . உண்மையில் அந்த வீட்டின் உரிமையாளருக்கும் ( முதியவர் ) நெடுந்தீவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக எதுவும் தெரிந்திருக்கவில்லை . அந்த வீட்டுக்காரர் இந்த ரகுநாதனுக்கு நெருங்கிய உறவினருமல்ல . இவரது நெருங்கிய உறவினர்கள் , சகோதரர்கள் இவரோடு பெரிதாக தொடர்பு வைத்துக்கொள்வதில்லை . கடந்த நான்கு ஆண்டுகளாக இவர் புங்குடுதீவிலும் இல்லை .
இவரது நெருங்கிய உறவினர் சிறீரெலோ எனும் அரச ஆதரவு கட்சியின் முக்கிய தலைவர் ஆவார் . அவருடனேயே கொழும்பிலும் , வவுனியாவிலும் வசித்துவந்ததாக இந்த நபர் இளைஞர்களிடம் நேற்று கூறியிருந்தார். கடந்த மாதமே இவர் புங்குடுதீவுக்கு வந்து சிலநாட்கள் நின்றுவிட்டு நெடுந்தீவிலேயே படுகொலை சம்பவம் நடைபெற்ற தருணம் வரைக்கும் தங்கியிருந்துள்ளார் . ஆகவே சமூக வலைத்தளங்கள் , இணையத்தளங்கள் சரியான முறையில் தகவல்கள், ஆதாரங்களை பெற்று செய்திகளை வெளியிடுவதே அனைவருக்கும் நல்லது என தீவகத்து இளைஞர்கள் தமது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்கள்.
இதே வேளை இவனைப் பிடித்துக் கொடுத்தது நான்தான் என தீவக அரசியல் அமைப்பாளர் ஒருவர் இவனது இதே புகைப்படங்களை வெளியிட்டு உரிமை கோரியுள்ளார். ஆனால் இவரே பிடித்துக் கொடுக்கும் போதோ அல்லது அவனுடன் கொலை தொடர்பாக விலாவாரியாக கதைக்கும் போதோ எந்த புகைப்படங்களும் எடுக்காமல் விட்டது சந்தேகத்துக்குரியது.  தன்னைப் பிரபலம் ஆக்குவதற்காக இவர் இவ்வாறான உரிமை கோரல் திருவிளையாடல்களை செய்திருக்கலாம் என கருதப்படுகின்றது.
May be an image of 1 personMay be an image of 1 personMay be an image of 1 person