புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவிலும் மின்னல் தாக்குதல்!! 17 வயது மாணவன் கருகிப் பலி!!

முல்லைத்தீவு விசுவமடு தொட்டியடி பகுதியில் மின்னல் தாக்கி பாடசாலை மாணவன் ஒருவர்
உயிரிழந்தார். இன்னொரு சிறுவன் காயமடைந்தார்.

இன்று பிற்பகல் மழை பெய்தபோது, நாவல் மரமொன்றின் கீழ் மாணவர்கள் சிலர் ஒதுங்கினர்.
இதன்போது, அந்த மரத்தின் மீது இடி விழுந்ததில் சிறுவர்கள் பாதிக்கப்பட்டனர்.

தர்மபாலசிங்கம் தயானந்தா (17) என்ற சிறுவன் உயிரிழந்தார்.

இன்னொரு சிறுவன் காயமடைந்தார்.