புதினங்களின் சங்கமம்

யாழ் சாவகச்சேரியில் கைக்குண்டை கையில் எடுத்துக் கொண்டு ஆமிக்காம்பிற்கு சென்ற லக்ஸ்மன் டொக்டர்!! பதற்றமடைந்த ஆமிக்காரர்!!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி சங்கத்தானை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ள லக்ஸ்மன் வைத்தியர்  வீட்டிலிருந்து கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்றைய தினம் (23-04-2023) காலை இடம்பெற்றுள்ளது.

வைத்தியர் வீட்டு வளவை சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது கைக்குண்டை கண்டெடுத்துள்ளார்.

இதனையடுத்து வைத்தியர் கைக்குண்டை எடுத்துக் கொண்டு சாவகச்சேரி தம்பதோட்ட இராணுவ முகாமிற்கு சென்று அந்த கைக்குண்டை இராணுவத்திடம் ஒப்படைத்துள்ளார்.

இது தொடர்பாக இராணுவத்தினரால் சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்று பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.