புதினங்களின் சங்கமம்

யாழில் ஆமி சுற்றிவளைத்த போது வாளை குளத்துக்குள் எறிந்த காவாலிக்கு நடந்த கதி!!

இராணுவம் சுற்றிவளைத்ததை அறிந்து வீட்டிலிருந்த வாளை எடுத்து குளத்திற்குள் வீச முயற்சித்த இளைஞன் ஒருவா் பொலிஸாாினால் கைது செய்யப்பட்டுள்ளாா்.
நாவாந்துறையில் இன்று அதிகாலை முதல்  படையினர் மற்றும் பொலிஸாரின் சுற்றிவளைப்புத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே சந்தேகநபர் வாள் ஒன்றுடன் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் வாளை குளத்துக்குள் வீச முற்பட்ட போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கண்டுள்ளார். அதனால் சந்தேகநபர் அதனை கீழே போட்டுள்ளார்.
வீட்டில் மறைத்துவைத்திருந்த வாளை தேடுதல் முன்னெடுக்கப்படுவதால் அவர் குளத்துக்குள் வீச வந்தார் என விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், வாளுடன் சந்தேகநபரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.