புதினங்களின் சங்கமம்

யாழ் மாநகரசபை முஸ்லீம் உறுப்பினர் கைதாகி விடுதலை!! சதி தி்ட்டம் தீட்டியதாக தகவல்!!

யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் உறுப்பினர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட் நிலையில் விசாரணைகளின் பின் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம் நகரப்பகுதியைச் சேர்ந்த முஸ்லீம் உறுப்பினரான நிஷாஹிரே நேற்று இரவு 10 மணியளிவில் இவ்வாறு கைது செய்யப்பட்ட நிலையில் விசாரணைகளின் பின் இன்று நண்பகல் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த உறுப்பினர் நேற்று இரவு 10 மணிக்குப் பின் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த நேரத்தில் சுமார் 10 இற்கும் மேற்பட்ட முஸ்லீம் இளைஞர்களுடன் யாழ் நகரிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் இரகசிய கூட்டம் ஒன்றினை மேற்கொண்டாதவும்
குறித்த தகவலை அறிந்து அப் பகுதிக்குச் சென்ற பொலிசார் அவரைக் கைது செய்து கொண்டுசென்றிருந்த நிலையில் இன்று நண்பகல் விசாரைணைகளின் பின் அவரை விடுவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.