புதினங்களின் சங்கமம்

ஆமிக்காரனுகே அல்வா கொடுத்த காரைநகர் பஸ் கொண்டக்டர்!!!(Photos)

தனியார் மற்றும் அரச பேருந்து சேவைகள் இயங்க  அனுமதிக்கப்பட்டதால்  யாழ்ப்பாண மாவட்டத்தில் மீண்டும் இவை வீதிப் போக்குவரத்தில் ஈடுடுபடுகின்றன.  கொரோனாவிற்கு முன்மைய காலத்தைவிட தற்பொழுது பல தனியார் பேருந்துகள் தலைதெறிக்க வீதியில் ஓடி மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

Image may contain: one or more people, sky, tree and outdoor

தனியார் பேருந்து மட்டுமன்றி அரசு பேருந்துகளும் அவ்வாறான ஓட்டப்போட்டி போட்டு மக்களை அச்சத்துக்கு உள்ளாக்கி பலரை மரணத்தின் விளிம்புவரை கொண்டு சென்று காட்டியுள்ளது ஊரடங்கிற்கு  முற்பட்ட காலத்தில் பிரதான வீதிகளில் நேரக் கணிப்பாளர் நிறுத்தப்பட்டு இவை வீதியில் பயணித்த போதும் கூட கட்டுப்பாடில்லாமல் தலைதெறிக்க ஓட்டப்போட்டியில் ஓடி மக்களை பாதிப்பிற்குள்ளாக்கியமை நாம் முன்னர் வெளியிட்டிருந்தோம்.

தற்போதைய சூழ்நிலையில் நேர கணிப்பாளரும் சேவையில் இல்லை எனவே தற்போதைய நிலை என்ன என்று சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை தனியார் மற்றும் அரசு பேருந்துகள் அடாவடிகள் மிகவும் அதிகரித்துள்ளமையை தற்போது காணக்கூடியதாகவுள்ளது.

இன்றும் கூட காரைநகர் -மானிப்பாய் -யாழ்ப்பாணம் மற்றும் இளவாலை -யாழ்பாணம் மற்றும் மாதகல் -யாழ்ப்பாணம் சேவையில் ஈடுடுபடும் தனியார் பேருந்துகள் தங்களுக்குள்ளும் அரச பேருந்துடனும் போட்டிபோட்டு ஓடிச் சென்றதால் பல சந்தர்ப்பங்களில் மக்கள் பயத்தில் உறைந்ததை அவதானிக்க முடிந்தது குறிப்பாக நண்பகல் ஒரு மணி அளவில் சன நெரிசல் அதிகமான மானிப்பாய் நகரில் காரைநகர் -யாழ்ப்பாணம் தனியார் பேருந்தும் அதே பாதையில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தும் மக்களை கவனிக்காது மின்னல் வேகத்தில் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டமையால் மக்கள் அச்சத்தில் உறைந்த மைய காணக்கூடியதாக உள்ளது.

அதுமட்டுமன்றி மானிப்பாயில் ஆலடி சந்தியில் பொதுமகன் ஒருவரை கட்டியணைத்து இழுத்து பேருந்தில் நடத்துனர் ஏற்றியுள்ளார்.இவர் முக கவசம் அணிய வில்லை .வைரஸ் தொற்று காலமாகிய தற்பொழுது ஒருவரை ஒருவர் தொடுவதை தவிர்க்குமாறு சுகாதாரப் பகுதியினர் அறிவிக்கும் நேரத்தில் இவ்வாறு தனியார் நடத்துனர்கள் மக்களை உடற்பாகங்களில் தொட்டு அணைத்து ஏற்றுவதால் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும் வசதி குறைந்த மக்கள் பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த சம்பவம் நடந்த போது அச் சந்தியில் ராணுவத்தினர் கடமையிலீடுபட்டிருந்தமையுமரயும் குறிப்பிடத்தக்கது .மக்கள் அதிகமாக பயணிக்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் சமூக இடைவெளிகளை கவனிக்காமல் இவர்கள் அதிக பயணிகளை அடுக்கி ஏற்றிச்செல்வதையும் எந்த அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.

Image may contain: sky, tree and outdoorImage may contain: one or more people, sky, tree, outdoor and nature