FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்

பிரபல ஊடகவியலாளர், இலங்கை அமைச்சர் போன்றவர்களின் பெயரைப் பயன்படுத்தி இலங்கையர்களின் பணத்தை டொலர்களாகப் பறிக்கும் சர்வதேச மோசடிக் கும்பல்!! அதிர்ச்சித் தகவல்கள்

பிரபல ஊடகவியலாளரும் ஊடகவியலாளர் உரிமை ப் போராட்ட வா தி யும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான சுனந்த தேசப்பிரியவின் பெயரை போலியான (fake) முறையில் பயன்படுத்தியும் போலியான ( fake) முறையில் ஊடகப்பெயர்களைப்
பயன்படுத்தியும் சர்வதேச நிதி மோசடிக்கும்பல் இலங்கையர்களை ஏமாற்றிக் காசுபறிக்க கடும் முயற்சி மேற்கொண்டுள்ளது.

சமூகவலைத்தளங்களில் பணம் கட்டி விளம்பரம் செய்து குறித்த மோசடிக் கும்பல் இலங்கை வாழ் மக்களின் பணத்தை டொலர்களாக ஏமாற்றிப் பறித்து வருகின்றன.

இலங்கையின் பிரபல ஊடகங்களில் தமது செயற்பாடுகளுக்கு ஆதரவாக பிரபலமானவர்கள் கருத்து தெரிவித்து வெளியிட்டதாக கூறப்பட்ட சில இணையத்தள ஸ்கிறீன்ஸ் சொட்களையும் அந்த மோசடிக் கும்பல் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு இலங்கையர்களை ஏமாற்ற முற்பட்டுள்ளது. ஆதாரங்கள் இணைத்துள்ளோம்.

குறித்த ஸ்கிறீன்சொட்கள் போலியானவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சர்வதேச நிதி மோசடி வலைப்பின்னல் இலங்கையின் ஊடகவியலாளர்களை சிக்கவைக்கும் நோக்கில் குறிப்பாக சிங்கள, ஆங்கில மொழி ஊடகங்களில் பணியாற்றுபவர்களையும் வேறு உயர் தொழில்வாண்மைத் துறைகளில் பணியாற்றும் பொருளாதார பலம் மிக்க இலங்கையர் களையும் சிக்கவைக்கும் நோக்கம் கொண்டுள்ளதாகவும் தெரிகிறது…. ஆயினும் இந்த சர்வதேச நிதிமோசடிக் காரர்கள் போலியாக யார் யாரது பெயர்களைப் பயன்படுத்துகிறார்களோ அவர்கள் தங்களது தெளிவான மறுப்பை வெளியிட்டு நாட்டுக்கு நிலைமையை தெளிவுபடுத்தவேண்டும் என்று இவ்விடயங்களைத் தொடர்ந்து அவதானிக்கும் இலங்கையில் பணியாற்றும் தொழில் நுட்பக் கல்லூரி கணணிவிஞ்ஞான விரிவுரையாளர் ஒருவர் வம்பனூடாக வேண்டுகோள் விடுத்தார். அவ்வாறு இல்லையெனில் அவர்கள் அந்த சர்வதேச நிதி மோசடி வலைப் பின்னலை விரும்பியோ விரும்பாமலோ ஆதரிப்பது போன்ற தோற்றப்பாடு நாட்டு மக்கள் மத்தியில் உருவாகி களங்கமும் அபகீர்த்தியும் பாதிப்புக்களும் ஊடகத்துறைக்கும் நாட்டுக்கும் ஏற்படும் எனவும் அந்த கணணிவிஞ்ஞான விரிவுரையாளர் எச்சரித்தார்.

இலங்கை மத்திய வங்கியின் இலச்சினை போலியாகத் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது

சுனந்த தேசப்பிரியவின் பெயரையும் விபரங்களையும் போலியாக மோசடியாகப் பயன்படுத்திய சர்வதேச நிதிமோசடிக் கும்பல் பிரபல அரசியல் விமர்சகரும் ஊடகவியலாளருமான அமந்த பெரேராவின் பெயரையும் போலியாகவும் மோசடியாகவும் பயன்படுத்தியுள்ளது…..

இலங்கையின் அமைச்சர் ஒருவரின் பெயரையும் தமது நிதி மோசடிவலைப் பின்னலுக்குள் போலியாக இழுத்துவிட்டு அதன் மூலம் சட்டத்திற்கும் ஒழுக்கத்திற் கும் புறம்பாக விளம்பரம் தேடி இலங்கை நாட்டு மக்களின் நிதியை சூறையாட முற்படுகிறது அந்த நிதிமோசடிக்கும்பல் ! இலங்கை அரசாங்கத்தின் உரிய அதிகாரக் கட்டமைப்புக்கள் உடன் மக்களுக்குரிய விழிப்பூட்டலைச் செய்யமுன்வரவேண்டும்