FEATUREDLatestVampan memes

தனது குடும்பத்தை வளர்ப்பதற்காக யாழ் மக்களை பலியாக்கும் யாழ் மேயர்!!

தனது மனைவி, பிள்ளைகள் சொகுசாக வாழ்வதற்காக யாருடைய குடும்பமாவது நாசமானாலும் பறவாயில்லை என நினைத்து, பெரும் பணத்தை லஞ்சமாக பெற்று மிகக் கேவலமான செயற்பாட்டை செய்துள்ளார் யாழ் மாநகர மேயர் ஆனோல்ட் என யாழ்ப்பாண புத்திஜீவிகள் பெரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

பிரமிட் முறையில் பணத்தைப் பெற்று மக்களை பாழும் கிணற்றில் தள்ளும் குளோபல் லைப் என்ற ஏமாற்று நிறுவனத்தை யாழ் மேயர் லட்சக்கணக்கான லஞ்சத்தைப் பெற்று யாழ் மாநகரசபை எல்லைக்குள் திறக்க அனுமதி கொடுத்துள்ளார் என யாழ்ப்பாண மக்கள் பெரும் விசனத்துடன் தெரிவிக்கின்றனர்.

சாவகச்சேரியில் இருந்து சாவகச்சேரி நீதவான் சிறிநிதிநந்தசேகரனின் உத்தரவில் அப்பகுதியில் இருந்து துரத்தப்பட்ட குறித்த ஏமாற்று நிறுவனம் தற்போது யாழ் நகரில் பலாலிவீதியில் இலுப்பையடிச் சந்திக்கு அருகாமையில் யாழ் மேயரின் துணையுடன் திறக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனம் சில மாதங்களுக்கு முன் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு அருகாமையில் கஜன் மண்டபத்தில் ஒவ்வொரு ஞாயிறும் தனது ஏமாற்று வேலைகளை காட்டி பல அப்பாவிகளை படுகுழியில் தள்ளியதும் அதன் பின்னர் பலரது எதிர்ப்பால் அங்கிருந்து அந்த நிறுவனம் துரத்தப்பட்டதும் தெரிந்ததே.

இந்த நிறுவனத்துக்கு எதிராக யாழ் மேயரின் நெருங்கிய நண்பராக இருந்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் கடும் நடவடிக்கை எடுத்து வந்ததுடன் மாகாணசபையிலும் இந்த நிறுவனத்துக்கு எதிராக பிரோரணை கொண்டு வந்திருந்தார். ஆனால் குறித்த நிறுவனத்தை அவரது நண்பனான ஆனோல்டே திறந்து வைத்து படு கேவலமான நடவடிக்கையை எடுத்துள்ளார்.

பணம் சம்பாதிப்பதற்கு என்னவேண்டுமானாலும் செய்யகூடிய நிலையில் யாழ் மேயர் இருப்பதையிட்டு அவரது நண்பர்களே அதிர்ந்துள்ளார்கள். அரசாங்கத்தை ஏமாற்றியும் யாழ் மாநகரசபையை ஏமாற்றியும் பணக்காரர்களை ஏமாற்றியும் லஞ்சம் வாங்குவது கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அப்பாவிகள் வாழ்வில் விளையாடும் இந்த நிறுவனத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆனோல்ட் எடுத்துள்ள நடவடிக்கை கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறி்த்த குளோபல் லைப் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் எவ்வாறு அப்பாவிகளை ஏமாற்றுகின்றார்கள் என்பதை நாம் கீழே குறிப்பிடுகின்றோம்.

அமெரிக்க அதிபர் றொனால்ட்ரம், ரணில் விக்கிரமசிங்க, முத்தையா முரளிதரன் தமது நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்பார்கள். அதற்காக அவர்கள் தமது பிரச்சாரத்தில் குறித்த வீடியோவைக் காட்டுவார்கள். அதில் ரம் இங்கிலீசில் கதைப்பார். நெற்வேக் மாக்கற்றிங் தொடர்பாக அதில் ஒரு சொல் சொல்வார். அத்துடன் அந்த வீடியோவை நிறுத்தி விடுவார்கள். அவருக்கும் இந்த நிறுவனத்துக்குட் எந்தத் தொடர்பும் இல்லை. நெட்வேர்க் மார்க்கட்டிங் என்ற வியாபார தந்திரத்தை ரொனால்ட் ரம் மட்டுமல்ல பலர் பிரயோகித்துள்ளனர். நெற்வேர்க் மார்க்கட்டிங் என்பது ஒரு பொருளை முகவர்கள் ஊடாக விற்பனை செய்யும் தந்திரமாகும். அந்த முகவர்களுக்கு குறைந்த விலையில் தமது உற்பத்திப் பொருட்களைக் கொடுத்து அதை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதாகும்.

ஆனால் குறித்த குளோபல்லைவ் நிறுவன நாதாரிகள் 6 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருளை ஒருலட்சத்து 40 ஆயிரம் ரூபாவுக்கு கொடுப்பார்கள். சில வேளை சொல்வார்கள் பொருளைப் பற்றி கவலைப்படவேண்டாம். பொயின்ஸ் எடுப்பதைப் பற்றி கவனியுங்கள் என.

இவர்கள் பொயின்ஸ் (புள்ளி) என்று கூறுவது தமது நிறுவனத்தில் 6ஆயிரம் ரூபா பொருளை 140000.00 ரூபாவுக்கு வாங்கிய அப்பாவி இன்னும் இரண்டு அப்பாவிகளுக்கு அந்தப் பொருளை தலையில் கட்டினால் அந்த அப்பாவிக்கு 1.5 புள்ளி வீதம் 3 புள்ள வரும் என்பார்கள். பின்னர் வாங்கிய இரு அப்பாவிகளும் வேறு இருவருக்கு விற்றார் அந்த அப்பாவிகளுக்கு தலா 3 புள்ளிகளும் முதல் வாங்கிய அப்பாவிக்கு 6 புள்ளிகளும் வரும் என்பார்கள்.

இது பிரமிட் முறையாகும். ஆனால் அவர்களது வாயில் இருந்து பிரமிட் என்ற சொல்லே வராது. கேட்டால் வடிவேலு பாணியில் வாயிலடி… வாயிலடி என்று பதற்றப்படுவார்கள். குறித்த புள்ளிகளுக்கு 13500 ரூபா வரும் என்பார்கள். இதை நம்பி சேருபவர்களுக்கு ஆப்பு இறுக்கிவிடுவார்கள். காசு ஒரு போதும் சேருபவர்களின் கையில் வராது.

இவர்களது மிக ஏமாற்று வேலைகள் இங்கு சுட்டிக்காட்டப்படுகின்றது.

இவர்கள் ஒரு போதும் சேருகின்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கமாட்டார்கள். ஒரு மண்டபத்தில் காசு ஆசை உள்ள எல்லோரையும் அழைத்து வைத்து மூளைச்சலவை செய்வார்கள். இவர்கள் மண்டப மேடையில் வரும் போது மிக கோலாகலமாக வருவார்கள். நிறுவனத்தில் வெற்றிகரமாக செயற்படுகின்றவர் என்ற போர்வையில் கோட்,சூட், ரையுடன் வந்து கலகலப்பார்கள். திரைகளில் பலவற்றைக் காட்டுவார்கள். பார்க்கின்றவர்கள் அப்படியே நம்பிவிடுமளவுக்கு பீலா விடுவார்கள்.

மலேசியாவில் தமது தலைமையகம் இருப்பதாக கூறி நாங்கள் எல்லாம் மலேசியா சென்று வருபவர்கள் எனவும் கூறுவார்கள். கொழும்பில் பெரிய ஸ்ரேடியத்தில் தமது நிறுவனம் கொண்டாடியதையும் வீடியோவில் காட்டுவார்கள்.

சந்தேகம் வருமளவுக்கு யாராவது கேள்வி கேட்க முற்பட்டால் அவர்களைக் கதைக்க விடமாட்டார்கள். அத்துடன் வங்கிகள் எல்லாவற்றையும் கேவலமாக கதைப்பார்கள். வங்கியில் வைப்பிலிடுபவர்கள் எல்லாம் முட்டாள் என்பார்கள். அத்துடன் தங்களது நிறுவனத்தில் சேருபவர்களைத் தவிர ஏனைய எல்லோரும் படு முட்டாள்கள் என்பார்கள். ஒரு வருசத்தில் கோடீஸ்வரராகலாம் என்பார்கள். இவர்களது கூற்றை நம்பி சேர்ந்தால் அவர்களின் தலையில் மிளகாய் அரைத்துவிடுவார்கள்.

அன்பார்ந்த குடாநாட்டு மக்கள் உட்பட வடபகுதியைச் சேர்ந்தவர்களே…

அவர்களை நம்பி காசு கட்டினால் கட்டிய காசுக்கு ஒருபோதும் உங்களுக்கு பணம் வரப்போவதில்லை. நீங்கள் குளோபல்லைப் நிறுவனத்தில் சேருவதற்கு முதல் இவ்வளவு கேள்விகளையும் அவர்களிடம் கேளுங்கள். அவர்கள் அதற்கு மளுப்பாமல் சரியான பதில் தருவார்களா என பாருங்கள்.

1) மேடையில் தோன்றி கதைப்பவர் உண்மையில் பல லட்சங்கள் சேர்த்துள்ளாரா?. அவருக்கு அந்த நிறுவனம் எவ்வளவு பணம் வங்கியில் வைப்பிலிட்டு அல்லது காசோலையாக கொடுத்துள்ளது. அதற்கான அத்தாட்சியைக் கேளுங்கள்.

2) உங்களிடம் குறித்த நிறுவனத்தைச் சேர்ந்த முட்டாள்கள் வரும் போது அவர்களிடத்தில் கேளுங்கள் நீங்கள் ஏன் உங்கள் உறவினர்கள், அம்மா, அப்பா, அயல்வீட்டுக்காரர்கள், கிராமத்தவர்களை சேர்க்கவில்லை??

3) 1 லட்சத்து 40 ஆயிரம் கட்டினால் கோடீஸ்வரராகலாம் என்றால் ஏன் ஏனையவர்கள் சேராது உள்ளார்கள்? ஏன் கல்வியைக் கஸ்டப்பட்டு கற்று கம்பசுக்கு போக வேண்டும்? ஏன் வைத்தியர்களாக வேணும்? ஏன் பொறியியலாளராக வேண்டும்? ஏன் உழைக்க வேண்டும்?? உலகத்தில் உள்ளவர்கள் அனைவருமே 1 லட்சத்து 40 ஆயிரத்தை கட்டிவிட்டு சொர்க்க வாழ்கை அனுபவிக்கலாமே??

மிகக் கேவலமான மாபியாக் கூட்டம் ஒன்று இதன் பின்னணியில் இயங்குகின்றது. போதைப்பொருளுக்கு அடுத்ததாக வட பகுதியில் நடக்கும் இந்த கேவலமாக செயற்பாட்டை அரச அதிகாரிகளும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு சில அரசஅதிகாரிகள், சமூகத்தில் முன்னிலையில் உள்ளவர்கள், ஒரு சில பொலிஸ் அதிகாரிகள், ஒரு சில சட்டத்தரணிகள் போன்றவர்களை இந் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் லஞ்சம் கொடுத்து தமது கைகளுக்கு வைத்துக் கொண்டு இந்த கேவலமான நடவடிக்கைகைள செய்து வருகின்றார்கள்.

கோப்பாய் பிரதேசசெயலராக முன்னைய காலத்தில் செயற்பட்ட ஒருவரும் இந்த நிறுவனத்தில் பலரைச் சேர்த்து அவர்களை நிர்க்கதியாக்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் வங்கி முகாமையாளராக செயற்பட்ட ஒருவரும் தனது வங்கியில் கடன் கேட்டுச் சென்றவர்களை இந்த நாதாரிக் கூட்டத்துக்குள் சேர்த்து அவர்களை நடுத்தெருவில் விட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. அத்துடன் யாழில் உள்ள பிரபல பாடசாலையின் பழையமாணவர் சங்கத் தலைவரும் இந்த நாதாரிக் கூட்டதில் ஒருவனாக இருந்து அலங்கோலங்கள் செய்து வருகின்றதும் ஆதாரங்களுடன் கிடைத்துள்ளது.

இதே வேளை தமது நிறுவனம் விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்டது என்றும் இந்த நாதாரிகள் கூறி வருகி்ன்றார்கள். இதற்காக பல அப்பாவி புனர்வாழ்வு பெற்ற புலிகளையும் இணைத்து அவர்களை வைத்தே பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றார்கள். ‘வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்லமாட்டான்‘ என்பது போல புலியாக இருந்தவன் தப்பு செய்ய மாட்டான் என்ற மன நம்பி்க்கையை இவர்கள் மூலம் அப்பாவிகளுக்கு ஊட்டச் செய்கின்றார்கள்.

இதற்காக குறித்த பிரபல பாடசாலை பழைய மாணவசங்க தலைவனும் ( முன்னர் புலிகளின் மருத்துவப்பிரிவில் கடமையாற்றியவன்) பலரிடம் இதைக் கூறியே பாழுங்கிணற்றில் தள்ளி வருகின்றான். தனக்கு இருக்கின்றா கார் வசதிகளைக் காட்டி தன்னைப் போல ஆடம்பரமாக வாழலாம் என இவன் பலரி்டம் ஆசை வார்த்தை கூறி வருவதாக தெரியவருகின்றது.

இவர்கள் தொடர்பாக புகைப்படங்கள் எம்மிடம் உள்ளன. சந்தர்ப்பம் வந்தால் அவற்றையும் பிரசுரிப்போம்.

வடக்கு மாகாண ஆளுநர் தற்போது கதாநாயகன் போல பல செயற்பாடுகளைச் செய்து அதிரடி காட்டி வருகின்றார். அவருக்கு இதுவரை இந்த சம்பவம் தெரியாது உள்ளதா?? அல்லது அவரும் இதற்கு உடந்தையா?

வடக்கு மாகாண நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் இது தொடர்பாக அக்கறை செலுத்துதல் அவசியம். ஏனெனில் அவர்கள் தமது பிரச்சாரத்தின் போது தமது அணியில் வடமாகாணத்தில் உள்ள ஒரு நீதிபதியும் பிரபல சட்டத்தரணிகளும் உள்ளார்கள் என போலிப்பிரச்சாத்தை மேற்கொள்கின்றார்கள்.

யார் என்ன நிலையில் இருந்தாலும் தயவு செய்து மக்களே ஏமாறாது இருங்கள். உங்களை நோக்கி இந்த நிறுவனத்தைச் சேர்ந்தவன் என கூறி உங்களுடன் வேலை செய்கின்ற உங்களது அதிகாரியே வரலாம்.. உங்களைக் காசு கட்டு என்று தொல்லைப் படுத்தலாம். உங்களது நெருங்கிய உறவினரோ அல்லது நெருங்கிய நண்பனோ இந்த நிறுவனத்தின் போலிக் கவர்ச்சியில் மயங்கி தானும் மாய்ந்து உங்களையும் மாய்க்க வரலாம். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்…

இந்த நிறுவனத்தில் சேர்ந்து நீ நல்லா வந்த பின்னர் நானும் சேருகின்றேன். அதுவரை என்னை தொந்தரவு செய்யாதே என கூறி சமாளித்துவிடுங்கள். அல்லது எமது இந்த செய்தி லிங்கை அவர்களுக்கு வாசிக்க கொடுங்கள்.

உயர் அதிகாரிகளாகவும் அரசியல்வாதிகளாகவும் இருந்து குறித்த நிறுவனத்தின் லஞ்சத்தைப் பெற்றுக் கொண்டு மக்களை புதை குழியில் தள்ளும் எவராயினும் அவர்கள் காசுக்காக தமது மனைவி பிள்ளைகளை விற்கவும் தயங்கமாட்டார்கள் என்பது வெளிப்படை உண்மை.