யாழ் மக்களே அவதானம் புங்குடுதீவை சேர்ந்த திருடனின் புதுவித திருட்டு..!!
இந்த நபர் சாரதி என்ற பெயரில் வீட்டிற்கு வந்து, உரிமையாளர்களுடன் உறவாடி, அவர்களின் நம்பிக்கையை பெற்று, வீட்டிலுருக்கும் பொன், பொருள், பணத்தினை, பெறுமதியானவைகளை திருடிச் செல்கிறார்.
486/1, 9ம் வட்டாரம், புங்குடுதீவு எனும் விலாசத்தினை சொந்த முகவரியாகக் கொண்ட தில்லைநடராசா சந்திரசேகரம் ஆகிய இந்த நபர் பதுளையில் திருமணம் முடித்துள்ளதாகவும், ஒரு மகன் இருப்பதாகவும் அறியப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் மினிபஸ் ஓடியதாகவும், பஸ்ஸில் பயணிக்கும் பெண் பயணியுடன் ஏதோ சில்மிசம் செய்தற்காக வேலையில் இருந்து விலக்கப்பட்டுள்ளார் என்றும் அறியமுடிகிறது.
வெவ்வேறுபட்ட தொலைபேசி இலக்கங்களில் இருந்து தொடர்புக்கொள்ளும் இந்த நபர் அண்மையில் 071-3376839, 070-3307819, 076-882850 இலக்கங்களைப் பயன்படுத்தியதாக தெரியவருகிறது.
போதைப்பொருள் பழக்கமுடையவராக கருதப்படும் இந்த நபரினால் பொதுமக்களின் உடைமைகளுக்கு மட்டுமன்றி, உயிராபத்தும் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே இந்த நபர் தொடர்பில் மக்கள் விழிப்புடன் செயற்பட்டு, இச்செய்தியை பலருடன் பகிர்ந்து, உங்களையும், உங்களைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றிக் கொள்வதுடன், ஏனையவர்களையும் எச்சரிக்கையுடன் இருப்பதற்கு உதவும். இந்த நபரைப் பற்றித் தெரிந்தாலோ, அவரினை அறிந்தாலோ உடனடியான பொலிஸ்க்கு தெரிப்படுத்துவது புத்திசாலித்தனம்.