கலியாணம் கட்டின கன பொம்பிளையளும் ஆம்பிளையளும் அந்த விசயத்தில கனக்க எதிர்பார்த்து

நான் முந்திச் சொன்ன மாதிரி கன பொம்பிளையளும் ஆம்பிளையளும் கனக்க எதிர்பார்த்து கன நடக்கமுடியாத நடைமுறைச் சாத்தியம் இல்லாத ஆசைகளை வளர்த்து இப்பிடியே நொட்டை நோகரிகம் பாத்து கடைசியில கலியாணம் இல்லாமலே போட்டினம்.
எங்கட ஆச்சி நெடுகவும் சொல்லுறவ ஆம்பிளையோ பொம்பிளையோ கனக்க ஆசைப்படக்கூடாது எண்டு. அப்பிடி ஆசைப்பட்டாக் கடைசியில ஒண்டும் கைகூடாம ஏம்பலிச்சுக் கொண்டு இருக்க வேணும் எண்டு. உந்தப் பெடி பெட்டையளின்ரை கலியாணக்கனவுகளுக்கு தாய்தேப்பனும் ஒரு காரணம் எண்டுதான் சொல்ல வேணும்.
அவையே கண்டும் காணாமலும் பிள்ளையளின்ரை மனசில தெரிஞ்சோ தெரியாமலோ தங்கட எதிர்காலப் புருசன் இல்லாட்டில் பெண்டாட்டி எப்பிடி இருக்க வேணும் எண்ட ஒரு விம்பத்தை கொண்டு வாறதுக்கு காரணமாக இருக்கினம். சில காசுக்காறர் என்ரை ராசாத்திக்கு ஒரு டொக்ரர் இல்லாட்டில் என்ஜினியரைத்தான் கட்டிவைப்பன் எண்டு செல்லம் பொழிவினம் அது அதுகளின்ரை ஆழ்மனதில பதிஞ்சிடும். பிறகென்ன உப்பிடியே டொக்ரர் என்ஜினியர்க் கனவிலேயே அதுகள் கடைசிவரையும் தனியன்களாக் காலத்தைக் கடத்திப்போடுங்கள்.
இன்னுஞ் சில இடங்களில தாய்தேப்பன் நட்டந்துட்டியா வந்து பிறகு அவை நினைச்ச மாதிரி டொக்ரர் என்ஜினியருக்கு கட்டிக்குடுக்கேலாமப்போன கன சம்பவங்கள் நடந்திருக்கிறது. எங்கட அப்பு நெடுகிலும் சின்னப்பிள்ளையளுக்கு ஒரு நாளும் ஆசை வார்த்தைகள் சொல்லக்கூடாது. அதுவே பிறகு அதுகளின்ரை வாழ்க்கையை நாசமாக்கிப்போடும் எண்டு சொல்லுவார்.
சில நேரங்களில உந்தப்பெடி பெட்டை உந்த ரீவியில வாற நாடகங்கள் படங்களைப்பாத்தும் தங்கட மாப்பிளை பொம்பிளை இப்பிடி இருக்க வேணும் அப்பிடி இருக்க வேணும் எண்டு கற்பனை செய்தே தங்கட வாழ்க்கையை நாசமாக்கி இருக்குதுகள்.
உப்பிடித்தான் எங்கட சொந்தக்காறர் தங்கட வெளிநாட்டில உள்ள மாப்பிளைக்கு கிளிமாதிரிப் பொம்பிளை வேணும் எண்டு தேடித்திரிஞ்சு பாக்கிற பொம்பிளையளில குறை குற்றம் நிறையப் பாத்து ஒரு மாதிரி ஒண்டை அனுப்பி வைக்க அது அங்க போய்க்கொஞ்ச நாளையில எங்கயோ பறந்து போட்டுது.
சில இடங்களில உந்த அளவுக்கு மிஞ்சி ஆசைப்பட்டு அப்பிடி மாப்பிளை வேணும் இப்படி மாப்பிளை வேணும் எண்டு அடம்பிடிச்சுக் கட்டாம இருந்த பொம்பிளையளால கன ஆண் சகோதரங்கள் தாங்களும் கலியாணம் கட்டாம இருந்து கஸ்ரப்பட்டிருக்கினம். சில நேரங்களில கிழடு செண்டு கட்டிப்பிறகு அவிட்டு மேய்க்க ஏலாம அந்தரப்பட்டிருக்கினம்.உப்பிடிக் கட்டாம இருந்த கன பொம்பிளையள் ஆம்பிளையள் வேலை செய்யிற இடம்வழியை எல்லாம் கர்புர் எண்டு கனபேருக்கு கரைச்சலாவும் இருந்திருக்கினம்.
மிச்சம் பிறகு…
Thanks Facebook Posr

காரைக்கவி கந்தையா பத்மானந்தன்

error

Enjoy this blog? Please spread the word :)