புதினங்களின் சங்கமம்

27 ஆண்டுகளாக சிறைக்குள் இருந்த தமிழ் அரசியல்கைதி கடும் நோயினால் மரணம்!!

 

கடந்த 27 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்துவந்த தமிழ் அரசியல் கைதி சிறைச்சாலையில் மரணமடைந்தது உறவுகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனையை சேர்ந்த செல்லப்பிள்ளை மகேந்திரன் ( வயது 46 ) என்பவரே நேற்று (01) மரணமடைந்தவராவார்.

கடந்த 1993ம் ஆண்டு மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக படையினர் நடத்திய சுற்றிவளைப்பின்போது இவர் கைது செய்யப்படார்.

இதன்பின்னர் நீதிமனறில் வழக்குகள் நடைபெற்று 68 ஆண்டுகள் சிறைத் தண்டைனைக்கு உள்ளான இவர் நீரிழிவு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே நேற்றைய தினம் மரணமடைந்தார்.