யாழில் கலியாண வீட்டில் நடந்த அலங்கோலம்!! முதலிரவு நடக்க முன்னரே மாப்பிளை, பொம்பிளைக்கு அந்தப் பரிசோதனை!!

யாழ்.அச்சுவேலியில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி திருமணம்! நிகழ்வை
ஒழுங்கமைத்தவருக்க வழக்கு, பீ.சி.ஆர் பரிசோதனைக்கும் நடவடிக்கை..

யாழ்.அச்சுவேலி பகுதியில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி திருமண நிகழ்வை
நடத்தியவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், மணமக்கள் உள்ளிட்ட ஒரு
பகுதியனருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

மிருசுவிலை சேர்ந்த மணமகனுக்கும், அச்சுவேலியை சேர்ந்த மணமகளுக்கும் திருமணம்
நடந்துள்ளது. திருமண நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் எந்தவொரு சுகாதார நடைமுறைகளையும்
மதிக்காமல் கலந்து கொண்டிருக்கின்றனர்.

குறித்த விடயம் இராணுவத்தினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இதனையடுத்து
பொலிஸார் இராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று நிகழ்வில் கலந்து கொண்டவர்களை
அடையாளப்படுத்தியுள்ளதுடன்,

மணமக்கள் உள்ளிட்ட ஒரு தொகுதியினருக்கு பீ.சி.ஆர் பரிசோதனை எடுக்க நடவடிக்கை
எடுத்துள்ளதுடன், சுகாதார நடைமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் திருமண நிகழ்வை
ஒழுங்கமைத்தவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ள பொலிஸார்.

15ம் திகதி மல்லாகம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் கூறியிருக்கின்றனர்.

error

Enjoy this blog? Please spread the word :)