யாழில் NPP கட்சியின் காவாலியை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடமிருந்து அழுத்தம் வந்ததா? பிணையில் விடுவிககாவிடின் நீதிபதியை மாற்றுவாராம்!! அதிர்ச்சித் தகவல்கள்
யாழில் நீதிமன்றத்தால் கூட பிணையிலி விட முடியாதவாறான குற்றச் செயலைப் புரிந்து பொலிசாரால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருந்த NPP கட்சியின் கரவெட்டிப் பிரதேசசபை உறுப்பினரை உடனடியாக பொலிஸ் தடுப்பிலிருந்து விடுவிக்குமாறு உயர்மட்ட அழுத்தம் வந்த காரணத்தால் குறித்த காவாலி பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளான்.
நெல்லியடி நகரில் உள்ள இளைப்பாறிய அரச உத்தியோகத்தரின் வீட்டிற்குள் மதுபோதையில் அத்து மீறி நுளைந்து வீடு மற்றும் சொத்துக்களை சேதப்படுத்திய வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் NPP உறுப்பினரான கணேசரூபன் மற்றும் அவனது சகாக்கள் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
2026.08.30 ம் திகதி அதிகாலை 12 மணியளவில் நெல்லியடி நகர்ப்பகுதியில் உள்ள அரச உத்தியோதர்களான குடும்பத்தினரின் வீட்டிற்குள் நிறை வெறியில் நுழைந்த NPP கட்சியின் கரவெட்டி பிரதேசசபை உறுப்பினரான கணேசரூபன் மற்றும் அவரது சகாக்களான கள்ளமண் கடத்தல்காரர்கள் அந்த வீட்டின் CCTV கேமராவினை உடைத்து வீட்டிற்குள் உட்புகுந்து வீட்டில் இருந்தவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
பின்பு வீட்டின் உரிமையாளர் 119 எனும் அவசர பொலிஸ் இயக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தியதோடு சம்பவ இடத்திற்கு வருகை தந்த நெல்லியடி பொலிஸார் கணேசரூபன் மற்றும் அவரது சகாக்களான கள்ள மண் கும்பலினை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்ட போது மீன்பிடி அமைச்சரும் ரஜீவன் எம்.பியும் பொலிசாருடன் தொடர்பு கொண்டு அவனை விடுவித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்து நீதிமன்றதிற்கு வருமாறு கூறி விடுவித்துள்ளதாகத் தெரியவருகின்றது.
பொலிஸ் பிடியிலிருந்து வெளியே வந்த குறி்த்த ரவுடியான கணேசரூபன் நீதிமன்றில் தனக்கு எதிராக நீதிபதி விளக்கமறியலில் வைக்க முற்பட்டால் அவரையும் உடனடியாக இடமாற்றம் செய்வேன்.. என சவால் விட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

