நெஞ்சுகளில் கடி காயங்கள்!! 16 வயது சிங்கள மாணவி நிர்வாணமாக மீட்கப்பட்டதன் பின்னணி!! “ரிக்ரொக்“குண்டன் தேடப்படுகின்றான்!!
களுத்துறை ஹோட்டல் ஒன்றின் மேல் மாடியில் இருந்து 16 வயதான மாணவியை நிர்வாணமாக தள்ளிவிட்டு தப்பிச் சென்றதாகக் கருதப்படும் 29 வயதுடைய இளைஞனைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள உயிரிழந்த மாணவியின் 19 வயதுடைய அயல்வீட்டு நண்பியும், அவரது காதலன் என கூறப்படும் 21 வயதுடைய இளைஞரும் வழங்கிய தகவலின்படி, இந்த சம்பவம் ஒரு கொலையாக இருக்கலாமென கருதப்படுகிறது.
16 வயது காதலியை நிர்வாணமாக்கி, மூன்றாவது மாடியில் இருந்து கீழே தள்ளி கொன்றதாக சந்தேகிக்கப்படும் இளைஞன், நாட்டின் பிரதான நிதி நிறுவனம் ஒன்றின் “சீசர்“ ( நிதி நிறுவனத்தில் வாங்கப்பட்ட வாகனங்களிற்கு முறையாக கட்டணம் செலுத்தப்படாவிட்டால், வாகனத்தை அடாவடியாக பறிமுதல் செய்பவர்) ஆக செயற்படுகிறார்.
அவர் ஏற்கெனவே 2 முறை திருமணம் செய்துள்ளார்.
16 வயது மாணவியும், அவரும் ரிக்ரொக் சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகியுள்ளனர். 2 நாட்களின் முன்னரே இருவரும் ரிக்ரொக்கில் அறிமுகமானதாகவும், மாணவியை ஹொட்டலுக்கு வருமாறு இளைஞன் அழைத்ததாகவும் தெரிய வருகிறது.
வெசாக் விடுமுறையில் உல்லாசமாக பொழுதை கழிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளது, பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மாணவி 3வது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்ததையடுத்து, கீழே இறங்கி வந்து, சடலத்தை புகையிரத தண்டவாளத்திலிருந்து அகற்றி, கரையில் வைத்து விட்டு, ஹோட்டலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வெள்ளை நிற வாடகை வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.
களுத்துறை தெற்கு, சிறிகுருச சந்தியில் அமைந்துள்ள ‘சீ வியூ சிட்டி ஹோட்டல்’ கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து மாணவி கீழே விழுந்தார்.
களுத்துறை தெற்கு நாகொட பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய திஹார திரானி நிஷங்க சில்வா என்ற மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
6ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் இவர்கள் ஹொட்டலுக்கு வந்தனர்.
16 வயதான மாணவி, அவரது பாடசாலையில் கல்வி பயிலும் அயல்வீட்டிலுள்ள 19 வயது மாணவி, அவரது 21 வயதான காதலன் ஆகியோர் ஹொட்டலுக்கு வந்தனர். வாடகை வாகனமொன்றில் 29 வயதான ரிக்ரொக் காதலனும் வந்தார். அவர் உடலில் பச்சை குத்தி, பருமனான தோற்றத்திலிருந்தார். 16 வயது மாணவியும், அவரும் அப்போதுதான் முதலில் நேரில் சந்தித்துள்ளனர்.
மாணவிகள் இருவரும் வயதில் குறைந்தவர்கள் என்பதால், உயிரிழந்த மாணவி, அயல்வீட்டிலுள்ள இன்னொரு 20 வயதான நண்பியின் அடையாள அட்டையை வாங்கி வந்திருந்தார். அவரது அடையாள அட்டை பதிவின்படியே ஹொட்டலில் அறையெடுத்தனர்.
சீ வியூ சிட்டி ஹோட்டலின் 3வது மாடியில் குளிரூட்டப்பட்ட 6,7 இலக்க அறைகளை வாடகைக்கு பெற்றனர். அவர்கள் நான்கு பேரும் ஒரே அறையில் இருந்து ஜொனி வோக்கர் ரெட் லேபிள் மதுபானம் பருகியுள்ளனர்.
சம்பவம் நடந்த அன்று வெசாக் நாள். அன்று மதுபானங்கள் விற்கப்படுவதில்லை. அதனால் முதல்நாளிலேயே மதுபானம் வாங்கி வைத்துள்ளனர்.
மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை அவர்கள் அங்கு தங்கியிருந்து மதுபானம் பருகியுள்ளனர். அப்பொழுது 19 வயது காதலியும், 21 வயது காதலனும் உணவு எடுக்க வெளியே சென்றுள்ளனர். அறைக்கு சென்ற 16 வயது மாணவியும் காதலனும் என்ன செய்தார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். காதலன் கைதான பின்னரே முழு விடயமும் வெளிச்சத்துக்கு வரும்.
அதன்பிறகு, அந்த இளைஞன் பீதியுடன் வெளியே சென்றது, ஜன்னல் வழியாக விழுந்த மாணவியின் நிர்வாண உடலை கரைக்கு கொண்டு வருவது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தொடர்பான ஆதாரங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன.
உணவு எடுக்க வெளியில் சென்ற காதல் ஜோடியின் தகவலின்படி, 29 வயது நபர் தொலைபேசியில் அழைத்து, 16 வயது மாணவி ஜன்னல் வழியாக கீழே குதித்து விட்டதாக பீதியுடன் கூறியதாகவும், தாம் சம்பவ இடத்துக்கு வந்த போது, அவர் ஹொட்டலுக்கு அருகில் நின்ற வெள்ளை நிற வாடகை வாகனத்தில் ஏறி தப்பிச்சென்று விட்டதாக தெரிவித்தனர்.
மாணவியின் உடல் புகையிரதத்தில் சிக்காமலிருப்பதற்காக, தண்டவாளத்தில் இருந்து அகற்றி கரையில் வைத்துள்ளனர் இந்த காதல் ஜோடி.
ஹொட்டலில் உணவு எடுக்க வந்த தாயும், மகளும் தண்டவாளத்தின் ஓரத்தில் மாணவியின் நிர்வாண உடலை கண்டு, ஹொட்டல் ஊழியர்களுக்கு தகவலளித்தனர். ஹொட்டல் ஊழியர்கள் 119 அவசர இலக்கத்துக்கு தகவலளித்தனர்.
அதன் பின்னர், 19 வயது காதலியும், 21 வயது காதலனும் பொலிஸில் சரணடைந்துள்ளனர்.
சிசிரிவி காட்சிகளின் அடிப்படையில், 29 வயதானவர் தப்பிச்சென்ற வாகனம் அடையாளம் காணப்பட்டு, அதன் சாரதி கைதாகினார்.
இவர்கள் மூவரும் நேற்று (07) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மாணவியின் இடது மார்பகம் உள்ளிட்ட பகுதிகளில் பற்களால் கடித்த காயம் காணப்படுகிறது. கீறல் காயங்களும் காணப்படுகிறது. ரிக்ரொக் ஆசாமியினால் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது.
தப்பியோடிய காதலனை அடையாளம் கண்டு, அவரது முகவரிக்கு பொலிசார் சென்ற போது, அவரது 2வது மனைவி அங்கு தங்கியிருந்தார்.
கணவர் இரண்டு நாட்களுக்கு முன்பு கடைசியாக வீட்டிற்கு வந்ததாகவும், தனது கணவர் அத்தகைய உறவைப் பேணுவது தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.
அத்துடன், இரண்டு நாட்களின் முன்னர் மதியம் வீட்டுக்கு வந்து இரண்டாயிரம் ரூபாய் கேட்டதாகவும், கவனமாக இருக்குமாறு கூறிவிட்டு சென்றதாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

