புதினங்களின் சங்கமம்

யாழ் நல்லூரில் கோர விபத்து ~பெண் கவலைக்கிடம்..! {படங்கள்}

யாழ்ப்பாணம் நல்லூர்ப பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.யாழ் நல்லூர் ஆலயத்திற்கு முன்பக்கமாகவுள்ள பருத்தித்துறை வீதியும் செம்மணி வீதியும் இணைகின்ற முத்திரைச் சந்தியில் இன்று(08) காலையில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

வீதியில் தரித்து நின்றிருந்த கார் திடீரென சடுதியாக திருப்ப முற்பட்ட போது வீதியால் துவிச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த பெண் மீது மோதியதில் இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த பெண் பலத்த காயமடைந்த நிலையில் அந்த வீதியால் சென்றவர்களும் அப்பகுதியில் உள்ளவர்களுமாக இணைந்து காயமடைந்தவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

May be an image of 4 people, car, bicycle, motorcycle, scooter, tyre and roadMay be an image of 7 people, slow loris, motorcycle, scooter, street and textMay be an image of 9 people, car and motorcycle