புதினங்களின் சங்கமம்

15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; அநுராதபுரம் அட்டமஸ்தான தலைமைத் தேரர் கைது – பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயும் கைது! நடந்தது என்ன?

15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் அநுராதபுரம் அட்டமஸ்தானத்தின் தலைமைத் தேரர் பல்லேகம ஹேமரதன தேரர் ( மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் ஆகியோர் இன்று (09) பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இரு சந்தேகநபர்களையும் உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு : நிட்டம்புவ பொலிஸாருக்கு அநுராதபுரம் பிரதான நீதவான் சியபத் சசிது விக்ரமரத்ன நேற்று (08) உத்தரவு பிறப்பித்திருந்தார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் (NCPA) தலைவி, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர் இனோகா ரணசிங்கவின் அறிவுறுத்தலின் பேரில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பல்லேகம ஹேமரதன தேரர் வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முக்கிய சந்தேகநபரைக் கைது செய்வதில் பொலிஸார் தாமதம் காட்டியதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியது.
விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தினால், பாதிக்கப்பட்ட சிறுமியின் பாதுகாப்பை உறுதி செய்ய அவசர மனு ஒன்றின் ஊடாக நீதிமன்றத்தின் தலையீட்டை NCPA கோரியிருந்தது.
இதனையடுத்து, இருவரையும் சந்தேகநபர்களாகப் பெயரிட்டு காவலில் எடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.