பட்டப்பகலில் யாழ் பண்டத்தாிப்பு இளவாலை பகுதிகளில் நிகழ்ந்த சங்கிலி அறுப்பு!
யாழ்ப்பாணம் பண்டத்தாிப்பு, இளவாலை பகுதிகளில் இரு வேறு இடங்களில் பெண்களின் தங்க சங்கிலிககள் அறுத்து செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒரு இடத்தில் சங்கிலி அறுத்த திருடனை மடக்கி பிடித்த பொதுமக்கள் திருடனை நன்றாக கவனித்த பின் பொலிஸாாிடம் ஒப்படைத்துள்ளனா்.
இளவாலை பகுதியில் வீதியில் பயணித்த பெண் ஒருவாின் சங்கிலியை மோட்டாா் சைக்கிளில் பயணித்த இருவா் அறுத்து சென்றுள்ளனா்.
இதனையடுத்து அப்பகுதியில் நின்றிருந்த சிலா் திருடனை துர த்திச் சென்று மடக்கி பிடித்தனா்.
மடக்கி பிடிக்கப்பட்ட திருடன் பொதுமக்களால் நன்றாக கவனிக்கப்பட்ட பின்னா் இளாலை பொலிஸாாி டம் ஒப்படைக்கப்பட்டான்.
இதேபோல் பண்டத்தாிப்பு பகுதியில் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் ஒருவாின் தங்க சங்கிலியை மோட்டாா் சைக்கிளில் வந்த இரு திருடா்கள் அறுத்துக் கொண்டு தப்பி ஓடியிருக்கின்றனா்.
இந்நிலையில் அடுத்தடுத்து இடம்பெற்ற இந்த சம்பவங்களையடுத்து பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகின்றது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸாா் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.

