புதினங்களின் சங்கமம்

யாழ் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியத்தை பணிப்பாளர் சத்தியமூர்த்தி திட்டமிட்டு எரித்தானா? அதிர்ச்சித் தகவல்கள்

யாழ் போதனாவைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நுாறு கோடி ரூபா மருந்துகள் எரிந்து நாசமாகியுள்ளன. இதனை நமது மாதனமூர்த்தா முட்டாள் அமைச்சரான இராமலிங்கம் சந்திரசேகர் மிக சோகமான முகத்தை வைத்துக் கொண்டு கூறுகின்றான். குறித்த மருந்துக்களஞ்சியத்தை சரியான முறையில் பாதுகாப்பற்ற நிலையில் பராமரித்து வைத்த காரணத்துக்காக உடனடியாகவே வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி கைது செய்ப்பட்டிருக்க வேண்டும். மக்கள் வரிப்பணம் றுாறு கோடி பெறுமதியான மருந்துகள் சொற்ப நேரத்தில் எரிவதற்கு காரணம் திட்டமிட்ட செயற்பாடா?
ஏற்கனவே யாழ் போதனாவைத்தியசாலை மருந்துகள் மிகக் தந்திரமான முறையில் விற்கப்படுவதாக அங்கு பணியாற்றும் பல உயர் உத்தியோகத்தர்கள் கூறிக் கொண்டுள்ளார்கள். ஏற்கனவே இரத்தவங்கியில் சேமிக்கப்படும் இரததம் யாழில் உள்ள தனியார் வைத்தியசாலைகளுக்கு அதிகூடிய விலைக்கு விற்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

ஏற்கனவே மிக விலைகூடிய மருந்துகளான புற்றுநோய் மருந்துகள் புற்றுநோயாளர்களுக்கு கொடுக்கப்படாது வெளியாட்கள் மூலமாக யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து விற்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன. குறித்த மருந்துகள் கிடைக்காது ஒரு தடவைக்கு ஒரு லட்சம் ரூபா கொடுத்து அந்த மருந்துகளை புற்றுநோயாளர்கள் வாங்கி பாவித்திருந்தார்கள்.  அந்த மருந்துகள் வைக்கப்பட்டிந்த களஞ்சியமே தற்போது தீப்பிடித்து எரிந்துள்ளது.

ஏற்கனவே சத்தியமூர்த்தி புலம்பெயர் தமிழர்களிடமிருந்து கிளிநொச்சி அபிவிருத்தி மற்றும் மாணவர்களின் கற்றல் மேன்பாடு என்பவற்றைக் காரணம் காட்டி பெருமளவு பணத்தை சுருட்டியதாக புலம்பெயர் தமிழ் உறவுகள் குற்றம் சாட்டி வருகின்றார்கள்.

இவ்வாறான நிலையில் கடந்த 3ம் திகதி வைத்தியர் அருச்சுனாவின் செயலளாராக உள்ள சட்டத்தரணி கௌசல்யா தனது பேஸ்புக் பக்கத்தில் மிக விரைவில் பிரபல வைத்தியர் கைதாகவுள்ளதாக பதிவிட்டு ஓரிரு நாட்களில் குறித்த மருந்துக் களஞ்சியம் எரிக்கப்பட்டுள்ளது கடும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகத் திட்டமிட்ட முறையில் நுாறு கோடி ரூபா பெறுமதியான மருந்துகள் எரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சத்தியமூர்த்தியிடமிருந்தே ஆரம்பகட்ட விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும். அது சாத்தியமாகுமா?