யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மீண்டும் பேராசிரியர் சிறிசற்குணராஜா!!
யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் 24ம் திகதி முதல் அடுத்துவரும் 3 ஆண்டுகளுக்குச் செயற்படும் வகையில் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

