புதினங்களின் சங்கமம்

யாழில் வீடு மூத்திரம் பெய்வதைப் பார்த்திருக்கின்றீர்களா? அங்கஜனின் உறவு வீடு மூத்திரம் பெய்யும் காட்சிகள்……

யாழ்ப்பாணம் கைலாச பிள்ளையார் கோவிலுக்கு அருகில் கோவில் வீதியில் உள்ள அங்கஜனின் உறவுக்காரனின் வீடொன்றில் ( அங்கஜனும் குறித்த வீட்டுக்காரனுக்குமிடையில் முறுகல் நிலை உள்ளதாக தெரிகின்றது) இருந்து  தினமும் வீதிக்கு தண்ணீர் விடப்படுவதனால் , வீதியால் செல்வோர் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

குறித்த வீட்டில் இருந்து வீதிக்கு விடப்படும் நீர் வீதியோரமாக தேங்கிய நிலையில் காணப்படுகிறது. அதனால் வீதியால் செல்லும் வாகனங்கள் நீரின் மேலால் செல்லும் போது , வீதியோரமாக நடந்து செல்வோர் , மோட்டார் சைக்கிள் , சைக்கிளில் செல்வோருக்கு நீர் அடிக்கப்படுவதானல் அவர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்

குறிப்பாக காலை வேளையில் பாடசாலை செல்லும் மாணவர்கள் , மாணவர்களை அழைத்து செல்லும் பெற்றோர் , வேலைக்கு செல்வோர் என பலரும் பாதிக்கப்படுகின்றனர்.

அத்துடன் , குறித்த வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டார் , மற்றும் அருகில் உள்ள தனியார் தங்குமிடம் ஆகியவையும் வீதியில் தேங்கும் நீரினால் அசௌகரியங்களை எதிர்கொண்ட நிலையில் , தற்போது தனியார் தங்குமிட உரிமையாளர் வீதிக்கும் , தனது தங்குமிடத்திற்கும் இடையில் சீமெந்து மேடை அமைந்துள்ளதால் நீர் மேலும் ஓட முடியாது வீதியில் பெருமளவில் தேங்கி நிற்கின்றது.

இது தொடர்பில் பல தடவைகள் மாநகர சபையினருக்கு அறிவித்த நிலையிலும் , மாநகர சபை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறானவர்களுக்கு மாநகரசபை ஆணையாளர் ஜெயசீலன் தனது ஆண்மையை காட்டுவதில்லை எனவும் இவ்வாறானவர்கள் அச்சுறுத்தினால் ஆணையாளருக்கும் இருந்த இடத்திலேயே மூத்திரம் போகும் என்றும் பலரும் கருத்துத் தெரிவிக்கின்றார்கள்……

No photo description available.No photo description available.No photo description available.No photo description available.No photo description available.