வைத்தியர் ஷாபி மீது 742 முறைப்பாடுகள்!! விசாரணைகள் ஆரம்பமாகின!!
வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் ஷாபி தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் பலரிடம் வாக்கு மூலங்களை பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
421 பெண்கள், 6 பெண் மகப்பேறு வைத்தியர்கள் உள்ளிட்ட 26 வைத்தியர்கள், 69 தாதிகள், 18 வைத்தியசாலை ஊழியர்களிடம் இதுவரை வாக்கு மூலங்களை பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக இதுவரை 742 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது.
இதேவேளை, குருணாகல் மற்றும் தம்புள்ளை வைத்தியசாலைகளுக்கு தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வைத்தியர் மொஹமட் ஷாபி தங்களுக்கு கருத்தடை செய்திருக்கலாம் என்றும், இதன் காரணமாகவே அவரிடம் சிகிச்சை பெற்ற பின்னர் குழந்தைகள் பிறக்கவில்லை என்றும் முறைப்பாடுகளில் பெண்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
(பின்னிணைப்பு – 5.42 pm)
இதேவேளை, வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக பெண்கள் தாக்கல் செய்துள்ள முறைப்பாட்டுகளின் விசாரணைகளுக்காக கொழும்பு பிரதான சட்ட மருத்துவ அதிகாரி தலைமையில் விசேட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.