புதினங்களின் சங்கமம்

யாழ்.பல்கலை மாணவர்கள், வியாபாரிகள் உட்பட்ட 09 பேருக்கு வடக்கில் கொரோனா!

யாழ்ப்பாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த கொரோனாத் தொற்றாளர்கள் 09 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் தொற்றாளர்கள் ஆறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவர் யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள். அவர்கள் குருணாகல், கம்பஹா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

யாழ்.நகர் நவீன சந்தைத் தொகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் ஒருவர்.

யாழ்.மாநகர எல்லைக்குள் வசிக்கும் 15 வயதுடைய சிறுமி ஒருவர் (குடும்பத்தாருக்கு ஏற்கனவே கொரோனாத் தொற்று)

மானிப்பாயைச் சேர்ந்த தாயும் மகளும் என இருவர் ஆகியோர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வவுனியா

வவுனியாவில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றுபவர், நோய் அறிகுறியுடன் வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவியில் மரக்கறி சந்தையில் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்றான பரிசோதனையில் வியாபாரி ஒருவர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார்.

கிளிநொச்சி

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு நோய் அறிகுறியுடன் சென்ற பரந்தனைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தகவல் – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்