புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்தில் சுவிஸ்பாதருடன் தொடர்பிலிருந்த மேலும் மூவருக்கு கொரோனா தொற்று !!!

பலாலிப் பகுதியில் தற்போது இருக்கின்ற குறித்த அரியாலை மதகுருவோடு கூடியளவு தொடர்புகளைப் பேணிய மேலும் 10 பேருக்கான பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டன.

அவற்றுக்கான ஆய்வுகூடப் பரிசோதனை முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது.

அவர்களில் மூவருக்கு தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி மூவரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள். தாய்,மகன், மகள். இவர்கள் அரியாலை முள்ளி வீதியைச் சேர்ந்தவர்கள்
தகவல்:பணிப்பாளர்,யாழ் போதான வைத்தியசாலை