Vampan memesபுதினங்களின் சங்கமம்

ஊரடங்கு நேரத்தில் மனிசிமாருடன் உடல் உறவு கொள்ளும் யாழ்ப்பாண குடும்பஸ்தர்களின் கவனத்திற்கு!!!(Photos)

கொரோனா தொற்று நடைபெறும் இந்த நேரத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள தம்பதிகள் எவ்வாறான முறையில் உறவு வைத்துக் கொள்ள வேண்டும்?? ஏன்?? எதற்கு?? எப்படி? என்ற அனைத்துத் தகவல்களுடன் நாகரிகமான முறையில் அனைத்துத் தம்பதிகளும் பார்க்க கூடியவாறான புகைப்படங்களுடன் கூடிய அறிவுத்தல்கள் கீழே உள்ளது.

இது வம்பன் இணையத்தள குடும்ப அக்கறைப் பிரிவு வழங்கும் சிறப்பு பதிவு

யாழ்ப்பாணம் உட்பட இலங்கை எங்கும் கொரோனா ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வேளையில் கலியாணம் கட்டிய குடும்பஸ்தர்களாகிய நீங்கள் ஒரு போதும் கள்ளக்காதலிகளுடன் கண்டபடி கூடிக்குலாவ முடியாது. ஏனெனில் அனைத்து விடுதிகளும், மறைவான இடங்களும் PHA, ஆமிக்காரர்கள், பொலிஸ்காரர்களால் கண்காணிக்கப்படுகின்றது. ஆகவே கட்டாயம் நீங்கள் உங்கள் மனைவியுடனேயே குடும்பமாக இருக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளீர்கள். ஆகவே உங்களுக்கு நல்ல குடும்பநல ஆலோசனை தரவேண்டிய கட்டாயம் உள்ளது.

பொதுவாக தமிழர்கள் தமது சந்ததியைப் பெருக்கும் அருமையான காலம் இதுவாகும். உயரதிகாரிகள் அழுத்தம் இல்லாமல், முதலாளிமாரின் தொல்லையில்லாமல் நீங்கள் வீட்டில் இருக்கின்றீர்கள். ஆகவே நீங்கள் தாமதியாது தாம்பத்தியத்தில் தொடர்ந்து ஈடுபடுங்கள். குறிப்பாக 21 வயதிற்கும் 35 வயதிற்கும் இடைப்பட்ட தம்பதிகளும் அத்துடன் அண்மையில் இந்த ஊரடங்கு நேரத்தையும் கருத்தில் எடுக்காது ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண் வைத்து கலியாணம் கட்டிக் கொண்ட இளம் தம்பதிகளும் மும்முரமாக தாம்பத்தியத்தில் ஈடுபடுங்கள். ஏனெனில் உங்கள் மூலமாகவே வலுவான, ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்க முடியும். அதுவும் பெண் குழந்தைகளாக பெற்று எடுங்கள். ஏனெனில் சந்ததிப் பெருக்கத்திற்கு ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே அவசியம். குழந்தை பெறும் பெண்களால் ஆகக் குறைந்தது 16 மாதங்களுக்கு பின்னரே இன்னொரு குழந்தை பெற முடியும். ஆனால் ஆண்கள் அப்படியல்ல…. உங்களுக்கு விளங்கினால் சரி.

ஆகவே தயவு செய்து ஆரோக்கியமான எமது சந்ததிகளைப் பெருக்குவதற்கான முயற்சியை 21 வயதிற்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட தம்பதிகள் செய்யுங்கள். இதற்கு ஆதரவாக இவ்வாறான தம்பதிகள் இருக்கும் வீடுகளில் உள்ள பெரிசுகள், மற்றும் மனைவியின் தம்பி, அண்ணன் போன்றவர்கள் இரவில் நீண்ட நேரம் ரீவி, இணையத்தளங்களில் நேரத்தைப் போக்காது 9 மணிக்கே நித்திரைக் குளிசையைப் போட்டுவிட்டு உங்கள் உங்கள் இடங்களில் போய் படுத்துவிடுங்கள். அத்துடன் இவ்வாறான தம்பதிகளுக்கு ஏற்கனவே பிறந்து அவர்களை அரியண்டப்படுத்தி அடுத்த குழந்தை தேவைதானா என சலிப்படைய வைக்கும் நிலைக்குத் தள்ளும் அந்த தம்பதிகளின் சிறு வயதுக் குழந்தைகளை உங்களுடன் அணைத்து வைத்து அவர்களையும் துாங்கச் செய்யுங்கள். ஏனெனில் எமது தமிழ் இனத்துக்கு தற்போது ஆரோக்கியமான சந்ததி முக்கியமாக உள்ளது.

சரி அடுத்து முக்கிய கவனத்தில் எடுக்க வேண்டிய தம்பதிகள் யார் தெரியுமா??? 40 வயதுக்கு மேற்பட்ட தம்பதிகளே உங்களுக்கு 2 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் மேலும் குழந்தை பெறும் முயற்சியை தயவு செய்து ஒதுக்கி வையுங்கள். ஏனெனில் இவ்வாறான வயதுள்ளவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளில் 100ல் 20 வீதமான குழந்தைகள் ஏதாவது ஒரு குறைபாட்டுடன் பிறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே நீங்கள் இவற்றில் அவதானமாக இருங்கள். அதுவும் 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களே பெரும்பாலும் கள்ள துணைகளை வைத்திருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதய சூழ்நிலைகளில் கள்ளத்துணைகளுக்கு கிட்டவே அண்ட முடியாத நிலையுடன் வீட்டில் கிட்டத்தட்ட விபரம் தெரிந்த வயதில் உங்கள் பிள்ளைகள் இருக்கும் நிலையிலும் நீங்கள் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளீர்கள். ஊரடங்கு இல்லாத நேரம் எனில் பி்ள்ளைகளை பாடசாலைக்கு விட்டுவிட்டு அல்லது ரியுசனு்ககு விட்டுவிட்டு பகலிலேயே நீங்கள் உங்கள் அலுவல்களை முடிக்கும் நிலை இருந்தது. தற்போது பகலிலும் ஒன்றும் செய்ய முடியாது….. இரவிலும் உங்கள் பிள்ளை உங்கள் மனைவி துாங்கிய பின்னரும் 12 மணிவரை ரீவியோ அல்லது வீடியோ கேமோ விளையாடிக்கொண்டு இருக்கலாம்…. ஆகவே இதற்கு பல யுக்திகளை நீங்களே கையாள வேண்டும். கள்ள துணை உள்ளவர்கள் எவ்வாறான சூழ்நிலையிலும் தங்கள் காரியத்தை முடித்துவிடுவார்கள். அவர்கள் அனுபவஸ்தர்கள். அவர்களுக்குத் தெரியும் எப்படி பிள்ளைகளை ஏமாற்றி தனது காரியத்தை சிறப்பாக முடிக்கலாம் என்று. ஆனால் அப்பாவிகளாக இருப்பவர்கள் கொஞ்சம் அவதானத்துடன் நடந்து கொள்ளுங்கள்.

அத்துடன் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறித்த காலப்பகுதியில் நீங்கள் தாம்பத்தியம் வைத்துக் கொள்ளும் நேரத்தில் கருத்தரிக்காமல் இருப்பதற்கான பொறிமுறைகளை அவதானத்துடன் கையாளுங்கள். பெரும்பாலானவர்களுக்கு குறித்த பொறி முறைகள் தெரிந்தாலும் ஒரு சிலருக்கு தெரியாது. இருக்கலாம் அவ்வாறு தெரியாமல் இருப்பவர்களுக்கான விளக்கப்படத்துடன் கீழே நல்ல விளக்கமாக போடப்பட்டுள்ளது.

பெண்கள் கருத்தரிக்காமல் இருப்பதற்கு குடும்பநல உத்தியோகத்தர்கள் பெண்களுக்கான தடை ஊசிகள் அல்லது குளிசைகள் கொடுத்திருப்பார்கள். அவ்வாறு உங்கள் மனைவிகளுக்கு அந்த வசதி இல்லை எனின் நீங்களே உங்களை கவசமிட்டு பாதுகாக்க வேண்டும். அப்படி நீங்கள் ஆண் உறை பாவிக்கும் போது றெயின்கோட் போட்டு குளிக்கின்றது போல் இருக்கின்றது என நினைத்து அறியாமையால் ஆண் உறையின் நுணிப்பகுதியை நறுக்கிவிட்டு உங்கள் காரியத்தை நிறைவேற்றினால்…… உங்கள் மனைவி கருத்தரிப்பதை யாராலும் தடுக்க முடியாது போய்விடும். கீழே உள்ள புகைப்படத்தைப் பாருங்கள்……. கொரோனா வைரஸ் தொற்று எதனால் ஏற்படும் என்று தெரிந்தும் போட வேண்டிய இடத்திற்கு போடாமல் ஐயா ஒருத்தர் இருக்கின்றார். உண்மையில் இவ்வாறு கவசம் போடுவதால் பிரயோசனம் இல்லை.இது போலவே தாம்பத்தியத்திலும் கருத்தரிக்காமல் இருப்பதற்கு பொருத்தமான முறையில் உறையை பிரயோகிக்க வேண்டும்.

Image may contain: one or more people

நீங்கள் 40 வயதுக்கு மேலாகியும் எவ்வளவோ முயற்சி செய்தும் எந்தவித பேறும் உங்கள் துணை மூலம் தமிழ் இனத்துக்கு இதுவரை பெற்றுக் கொடுக்கவில்லை எனில் நீங்கள் கீழே உள்ள புகைப்படத்தில் உள்ளவரைப் போல் நீங்கள் எந்தவித சாதனத்தையும் பாவிக்காது தாராளமாக எந்த வேளையும் எதுவும் செய்யலாம்….. ( முக்கிய குறிப்பு – எந்தவித பேறும் பெற்றுக் கொடுக்க முடியாத நான் இருந்து என்ன?? செத்து என்ன?? என்ற முடிவுக்கு தயவு செய்து வந்து விடாதீர்கள்)

Image may contain: Thibaharan Thiyagarajah, sitting

இப்படிக்கு

வம்பன் இணையத்தள குடும்ப அக்கறைப் பிரிவு……………..