புதினங்களின் சங்கமம்

யாழ் வடமராட்சி வல்லிபுரம் கோவில் வளாகத்தில் பட்டப்பகலில் யுவதியை அலங்கோலம் செய்த ரவுடிகள்!!

 

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு பொங்கலிற்காக சென்ற யுவதி மீது ஆலய வளாகத்தில் வைத்தே ரௌடிகள் அத்துமீறி நடந்துள்ளனர். யுவதியும் தாக்கப்பட்டுள்ளார்.இந்த அதிர்ச்சி சம்பவம் நேற்று நடந்தது.

நேற்று பொங்கல் செய்ய வந்த குடும்பமொன்றில் இரண்டு யுவதிகள் மீது துன்னாலை பகுதியை
சேர்ந்த ரௌடிக்குழு ஒன்று அத்துமீறி நடந்துள்ளது. ஒரு யுவதி ரௌடிகளின் அத்துமீறலை
தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரௌடியொருவன் யுவதியை தாக்கினான். யுவதியும் பதிலுக்கு தாக்கினார்.

ஊரில் பிரமலமான ரௌடிகளான தமக்கு கைநீட்டலாமா என்ற கோபத்தில் அந்த யுவதியை இழுத்து, அருகிலுள்ள மரமொன்றில் மோத வைத்து தாக்கினர். யுவதியின் உறவினர்கள் அவ்விடத்திற்கு வர கைகலப்பு ஏற்பட்டது.

பின்னர், அவ்விடத்திலிருந்து விலகி யுவதிக முச்சக்கர வண்டியில் ஏற்றிக் கொண்டு உறவினர்கள்
சென்றனர். துன்னாலையை சேர்ந்த ரௌடிக்குழு வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து யுவதிகளிற்கு தொல்லை கொடுப்பது வாடிக்கையென பக்தர்கள் தெரிவிக்கின்றனர். எனினும், யாரும் அதை கண்டு கொள்வதில்லை.

வல்லிபுரம் ஆழ்வார் கோவிலில் இதனால் பக்தர்கள் வருவது குறைவடைந்துள்ளது. அத்துடன் துன்னாலையைச் சேர்ந்த ஊத்தை சேது என்று அழைக்கப்படும் நடராஜா சேதுரூபன் என்பவனே இந்த ரவுடிகளுக்கு நோர்வேயிலிருந்து கஞ்சாவுக்கான பணம் வழங்குவதாகவும் தெரியவருகின்றது. 2015ம் ஆண்டு ஊத்தை சேது நோர்வேயிலிருந்து யாழ் வந்து ஐ.தே.க கட்சியின் விஜயகலாவின் அந்தரங்க செயற்பாட்டாளராக மாறி திரிந்துள்ளதுடன் 2015 ஆகஸ்ட் நடந்த பொதுத்தேர்தலுக்கு முதல் நாள் நள்ளிரவு வடமராட்சிக்கு கஞ்சா கடத்திச் சென்ற போது கையும் களவுமாக பிடிபட்டு சிறை சென்றவன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவன் தொடர்பாக ஏராளமான தகவல்களை நாம் ஏற்கனவே வெளியிட்டுள்ளோம். இவன் தற்போது பேஸ்புக்கில் பெருமளவு பணம் செலவு செய்து தன்னை நல்லவன் போல் காட்டி வீடியோ வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டில் உள்ள புலம்பெயர் தமிழர்களில் பணக்காரர்களை குறி வைத்து இவன் அப்பணக்காரர்களை புலிகளுக்கு ஆதரவானவர்கள் என போலியாக தெரிவித்து அரசாங்கத்திற்கு தகவல் கொடுக்கப் போவதாக அச்சுறுத்தி அவர்களிடமிருந்து பெருமளவு பணத்தை கப்பமாக பெற்று வருகின்றமை தொடர்பாக நாம் ஆதாரங்களுடன் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.